தமிழ்நாடு முழுக்க உள்ள.. TNPSC தேர்வர்களுக்கு அரசு அனுப்பிய முக்கிய மெசேஜ்.. உடனே நோட் பண்ணுங்க
சென்னை: 08.02.2025 அன்று நடைபெறவிருக்கும் குரூப்2A சேவைகள் உட்பட வரவிருக்கும் தேர்வுகளுக்கான OMR விடைத்தாள்களின் மாதிரி நகல் இன்று வெளியிடப்பட்டது. இதன் மூலம் tnpsc தேர்வாணையம் OMR விடைத்தாளில் ஒரு சில புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய OMR விடைத்தாளின் மாதிரி படமானது www.tnpsc.gov.in "OMR Answer Sheet - Sample" என்ற தலைப்பின்கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்புநிற பேனாவினால் (hallpoint pen நிரப்புவது தொடர்பாகவும், மேலும், பக்கம்-1ல் பகுதி-ன் கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம்-2ல் பகுதி- 1ன் கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய OMR விடைத்தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பணியிடங்கள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை அத்தேர்வுகளுக்கான அறிவிக்கைகளில் தெரிவிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை தேர்வாணையம் சார்பாக வெளியிட்டு உள்ளது. அதன்படி குரூப் 1 தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பின்வரும் அறிவுறுத்தலை வழங்கி உள்ளது:
1. தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது.
2. ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம்.
3. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும்.
4. தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தேர்வாணைய இணையத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு: இது போக குரூப்-4 பதவிக்கான காலிப் பணியிடங்களை 8,9325 அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932ஆக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் அரசுப் போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் தேர்வாக வேண்டும் என்பதை மையமாக வைத்து இந்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆண்டுதோறும் 200 பேருக்கு உணவு இதன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தங்கும் விடுதியுடன் சிறப்பு பயிற்சி வழங்க ₹12.90 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள எஸ்.ஐ. காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications