டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான 2024ம் ஆண்டுக்கான பல்வேறு தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட காலஅட்டவணை மற்றும் தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 தேர்வு உள்பட பல்வேறு தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து இன்று திருத்தியமைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:
அதன்படி 6,244 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் ஜுன் 9ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி 29 பணியிடங்களுக்கான குரூப் 1பி, 1சி தேர்வுகள் (Preliminary) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் ஜுலை 12ம் தேதி நடைபெறுகிறது.
இதுதவிர கடந்த மார்ச் மாதம் 28 ம் தேதி 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு (Preliminary) தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வு ஜுலை 13ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் 2,030 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வரும் ஜுன் மாதம் 28 ம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகு குரூப் 2, குரூப் 2 ஏ பதவிகளுக்கான தேர்வு (Preliminary) செப்டம்பர் 28 ல் நடைபெறுகிறது.
இதுதவிர 105 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவையில் (டிகிரி மற்றும் டிகிரி முடித்தவர்கள்) நேர்க்காணலுடன் கூடிய பதவிகளுக்கான அறிவிப்பு என்பது மே மாதம் 15ம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகு தேர்வு என்பதுஆகஸ்ட் 8 ம் தேதி நடைபெறும்.
மேலும் 605 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவையில் (டிகிரி மற்றும் டிகிரி முடித்தவர்கள்) நேர்க்காணல் இல்லாத பதவிகளுக்கான அறிவிப்பு என்பது ஜுலை 26ம் தேதி வெளியாகும். இந்த தேர்வு என்பது அக்டோபர் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதுதவிர 730 காலியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைக்கான (டிப்ளமோ/ஐடிஐ லெவல்) தேர்வு குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வெளியிடப்படும். இதற்கான தேர்வு நவம்பர் 17 ம் தேதி நடைபெற உள்ளது.
இதுமட்டுமின்றி 50 பணியிடங்களுக்கான Assistant Public Prosecutor Grade II in Prosecution Department (Preliminary) தேர்வு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 13ம் தேதி வெளியிடப்படும். இதற்கான தேர்வு டிசம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications