டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்.. எந்த குரூப் தேர்வு எப்போது நடக்கும்? வெளியானது முழு லிஸ்ட்.. நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை அத்தேர்வுகளுக்கான அறிவிக்கைகளில் தெரிவிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை தேர்வாணையம் சார்பாக வெளியிட்டு உள்ளது. அதன்படி குரூப் 1 தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பின்வரும் அறிவுறுத்தலை வழங்கி உள்ளது:
1. தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது.
2. ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம்.
3. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும்.
4. தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தேர்வாணைய இணையத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு: இது போக குரூப்-4 பதவிக்கான காலிப் பணியிடங்களை 8,9325 அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு முக்கியமாக தகவல் ஒன்று வெளியாகும் என்று தகவல்கள் வருகின்றன. ரிசல்ட் வரக்கூடிய தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது.
ஒன்றரை லட்சம் பேப்பர் என்றாலும் கூட சரியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருத்த நேரம் எடுக்கும். இதனால் திருத்தம் ஜனவரி 2025தான் முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் முடிவுகள் வரவும் தாமதம் ஆகலாம் என்கிறார்கள். ஜனவரி ரிசல்ட் வரக்கூடிய தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்கிறார்கள்.
மதிப்பெண் விவரம்; க்ரூப் 4 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை.. அதாவது இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆப் மார்க் பெறுவோர் ஆவண சரிபார்ப்பிற்குப் பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி இதுவரை கட் ஆப் மார்க்குகளை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
IT Jobs: சென்னை டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. மே 29ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
IT Jobs: நாளை இண்டர்வியூ.. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்? -
நீலகிரி வெலிங்டன்னில் வேலை.. குரூப் சி பிரிவில் 78 காலியிடங்கள்! 93 ஆயிரம் சம்பளம்












Click it and Unblock the Notifications