தேர்வு இல்லை.. மாதஊதியம் ரூ.25,000 டூ ரூ.75,000..டிஎன்எஸ்சிடி-யில் அரசு வேலை தயார்! சூப்பர் வாய்ப்பு
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் காலியாக உள்ள ஏராளமான வேலை, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, டிப்ளமோ, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் எழுத்து தேர்வு இன்றி வெறும் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வாக முடியும். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் முதல் மாதம் ரூ.75 வரையிலான சம்பளம் வழங்கப்பட உள்ளது.
சென்னை காமராஜ் சாலையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய ஆணையரகம் அமைந்துள்ளது. இங்கு காலியாக உள்ள வெவ்வேறு வகையான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வேலை தொடர்பான அனைத்து விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முக்கிய விபரங்கள் மட்டும் இந்த செய்தியில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடங்கள் எத்தனை?
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய ஆணையரகம் சார்பில் மொத்தம் 10 பிரிவுகளில் 53 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி ப்ரோகிராம் ஆபிசர் பணிக்கு 5 பேர், டேட்டா அனலிஸ்ட், சீனியர் அக்கவுண்டன்ட் பணிக்கு தலா ஒருவர், மாவட்ட ப்ரோகிராம் அலுவலர் (Community Service) பணிக்கு 12 பேர், மாவட்ட ப்ரோகிராம் அலுவலர் (Partnership Development and Convergence) பணிக்கு 10 பேர், மாவட்ட ப்ரோகிராம் அலுவலர் (Training) பணிக்கு 10 பேர், அக்கவுண்டன்ட் பணிக்கு 15 பேர் என மொத்தம் 53 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வி தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் டிப்ளமோ, டிகிரி, பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். எந்தெந்த பணிக்கு எந்த மாதிரியான கல்வி தகுதி வேண்டும்? என்பதை கீழே கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

மாத சம்பளம் என்ன?
ப்ரோகிராம் அலுவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். மாவட்ட ப்ரோகிராம் அலுவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரமும், டேட்டா அனலிஸ்ட், சீனியர் அக்கவுன்டன்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரமும், அக்கவுண்டன்ட் பணிக்கு மாதம் ரூ.25 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படும். இது தற்காலிக பணியாகும். 12 மாத அடிப்படையில் தான் தற்போது பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இவ்வாறு தேர்வாகும் நபர்களுக்கு திறமையின் அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது.

தேர்வு கிடையாது
விண்ணப்பம் செய்வோருக்கு எழுத்து தேர்வு என்பது இல்லை. நேர்க்காணல் முறையில் பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
இந்த பணிக்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://scd.tn.gov.in/ எனும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் ஹார்ட் காபி மற்றும் ஆவணங்களை Project Director - RIGHTS Project & Director, Directorate for Welfare of the Differently Abled, No.5, Kamarajar Salai, Lady Willingdon College Campus Chennai - 6000005 என்ற முகவரிக்கும், இமெயிலில் [email protected] என்பதற்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications