இனி சரக்கு போக்குவரத்தும் எளிதாக செய்யலாம்! தமிழக பேருந்துகளில் செம வசதி! அசரடிக்கும் டிஎன்எஸ்டிசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுக்க TNSTC மூலம் சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது. கேஎஸ்ஆர்டிசி போலவே டிஎன்எஸ்டிசி இந்த சேவையை தொடங்க உள்ளது.

TNSTC சார்பாக PPP முறையில் தமிழ்நாடு முழுவதும் சரக்கு / தளவாட சேவைகளை தொடங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான தனியார் பார்ட்னரை அடையாளம் காணுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் பரிவர்த்தனை ஆலோசனைகளை தயாரிப்பதற்கான டெண்டர்களை வெளியிட்டுள்ளது.

TNSTC to start cargo logistics services across Tamil Nadu under PPP Mode

பேருந்து மாற்றம்: பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) மாநகரப் பேருந்து அமைப்பை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பாக, அதாவது Intelligent Transport Systems ஆக மாற்ற உள்ளது. இதன் மூலம் சென்னை நகரம் அதன் பொதுப் போக்குவரத்து முறையை மொத்தமாக மாற்றியமைக்க உள்ளது.

இந்த திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (JICA) மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நிதியளிக்கிறது. தானியங்கி வாகன இருப்பிட அமைப்பு (AVLS) இதற்காக கொண்டு வரப்படும். பேருந்துகளில் ஜிபிஎஸ் உடன் ஒற்றைக் கட்டுப்பாட்டு அலகு (SCU) அமைக்கப்படும். தொடுதிரை கொண்டால் சிஸ்டம் பஸ் டிரைவர் கன்சோல் (BDC) பகுதியில் வைக்கப்படும். இதன் மூலம் பேருந்துகள் இனி ஜிபிஎஸ் உடன் இயங்கும்.

500 பேருந்து நிறுத்தங்கள் மற்றும் 71 டெர்மினல்கள் நிறுவப்படும் பயணிகள் தகவல் அமைப்பு (PIS) காட்சிப் பலகைகள், பயணிகள் மொபைல் பயன்பாடு மற்றும் இணையதளம் மூலம் நிகழ்நேர வாகனத் தகவல்கள்.
டிப்போ மேனேஜ்மென்ட் சிஸ்டம் (டிஎம்எஸ்) என்று பல புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

புதிய முறை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு மார்ச் முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்பட உள்ளது. வரும் நாட்களில் மற்ற நகரங்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சென்னையில் உள்ள பேருந்துகளில் எல்லாம் பயணிகள் தகவல் அமைப்பு வழங்கப்படும். அதாவது பேருந்துகளில் தானியங்கி மூலம் எந்த நிறுத்தம் என்ற அறிவிப்பு வெளியிடப்படும். இது போக உலக வங்கி மற்றும் ஜேர்மன் வங்கியான KfW ஆகியவற்றிலிருந்து நிதியுதவியுடன் 1,500 மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாக இயக்குனர் கூறுகிறார்.

சென்னை மாநகர மதிப்பீட்டின்படி, சென்னை மாநகரப் போக்குவரத்து அமைப்புக்கு மொத்தம் 5,000 பேருந்துகள் தேவைப்படுவதாகவும், இதனால் பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும் MTC நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய டிக்கெட் முறை: இது போக மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மார்ச் முதல் வாரத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி-எம்) 'சென்னை நகரத்தின் எளிமை' என்ற அறிக்கையை வெளியிடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்டிசி நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் இதை உறுதி படுத்தி உள்ளார்.

அதன்படி விரைவில் பயணிகளுக்கு பயணிகள் தகவல் அமைப்பு (பிஐஎஸ்) வழங்கப்படும். அதேபோல் தானியங்கி டிக்கெட் அமைப்பும் வழங்கப்படும். பேருந்துகளில் இருக்கும் கருவி ஒன்றை ஸ்கேன் செய்து நாம் டிக்கெட் எடுக்கலாம். மாநகர பேருந்து கார்டுகள் எதிர்காலத்தில் வழங்கப்படும். அதை இதில் டேப் செய்தும் டிக்கெட் எடுக்கலாம்.

நாம் செல்லும் தூரத்திற்கு ஏற்றபடி டிக்கெட் வழங்கப்படும். வெளிநாடுகளில் இப்படி டேப் செய்யும் முறை ஏற்கனவே அமலில் உள்ளது. அதே முறை சென்னையிலும் கொண்டு வரப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+