இளைஞர்களை குடிக்க தூண்டுவதா? அம்மாக்களின் சாபம் சும்மா விடாது! நடிகர் விஜயை சாடும் ராஜேஸ்வரி பிரியா!
சென்னை: இளைஞர்களை மது குடிக்கவும், புகை பிடிக்கவும் தூண்டுவதா? என நடிகர் விஜய்க்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.
லியோ படத்தின் முதல் பாடல் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருப்பதாகவும் அம்மாக்களின் சாபம் நடிகர் விஜயை சும்மா விடாது எனவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

"பத்த வெச்சு புகைய விட்டா பவர் கிக்"
"பத்தாது பாட்டில் நான் குடிக்க; அண்டாவ கொண்டா சியர்ஸ் அடிக்க"
"ஆடு சாராயம் பீடி சுருட்டு"
"புகையிலை பவர் கிக்"
"விரல் இடுக்கில் தீ பந்தம் நான் ஏத்தட்டான"
"மில்லி உள்ள போனா கில்லி வெளியே வருவான்டா" நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் பாடல் முகம் சுளிக்கும் அளவிற்கு இருப்பது மன வேதனை அளிக்கிறது.
''மதுவை மையபடுத்தும் பாடல் வரிகள் மற்றும் பாடல் முழுவதும் வாயில் சிகரெட் இந்த நிலை இப்படியே நீடித்தால் சினிமாவினால் ஏற்படும் பாதிப்பு இளைஞர்கள் வாழ்க்கையை குட்டி சுவராக்கிவிடும். இளைஞர்களை மது குடிக்க மற்றும் புகை பிடிக்க தூண்டுவதா?''
''எவ்வளவு மோசமாக நீங்கள் சமூகத்தினை சீரழித்தாலும் யார் கேட்க போகிறார்கள் என்ற தைரியம்தானே உங்களுக்கெல்லாம்,பணத்திற்காக எதை வேண்டுமென்றாலும் செய்யும் உங்களுக்கு கட்அவுட் ,மாலை ,மகுடம் இதெல்லாம் மூட தனத்தின் உச்சம்.''
''பொறுக்கி போல நடிக்கும் நடிகர் விஜய் அவர்களே கஞ்சாவிற்கும் மதுவிற்கும் அடிமையான மகன்களின் தாய்கள் இங்கே கதறி கொண்டிருக்க இதையெல்லாம் ஊக்குவீக்கும் நீங்கள் மனிதனே இல்லை.''
''இந்த பாடலை சொந்த குரலில் பாடுவது வேற பெருமையா? லட்சகணக்கான அம்மாக்களின் சாபம் உங்களை சும்மா விடாது.'' இவ்வாறு ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications