Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனாவில் இருந்து மக்களைக் காக்க கோவிலை திறங்க - முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கை

கொரோனாவில் இருந்து மக்களைக் காக்க கோவில்களை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா எப்போது ஒழியும் என்று அந்த கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். முதல்வரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பலரும் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே கோவில்களை திறங்கள் கொரோனாவில் இருந்து காக்க நாங்கள் கடவுளிடம் முறையிட்டுக்கொள்கிறோம் என்று ஆன்மீகவாதிகள் கூறியுள்ளனர். கோவில்களை திறக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க சமூக இடைவெளி வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. சர்ச்சுகள், மசூதிகளும் அடைக்கப்பட்டன. பல திருவிழாக்களும் ரத்தானது.

5 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சில தளர்வுகளுடன் கடந்த 8ஆம் தேதி முதல் பல மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு நீடிக்கிறது.

தமிழ்நாட்டில் அனுமதியில்லை

தமிழ்நாட்டில் அனுமதியில்லை

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவில்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிடவில்லை. இந்த நிலையில்
கடந்த வாரம் கொரோனா சிகிச்சை அளிக்கும் மையங்களை பார்வையிட வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள்
கொரோனா பற்றி கேள்வி எழுப்பினர். கொரோனா எப்போது ஒழியும் என்று கேட்டதற்கு அது கடவுளுக்குத்தான் தெரியும் என்று
கூறினார்.

கடவுளிடம் முறையிடவேண்டும்

கடவுளிடம் முறையிடவேண்டும்

நெருக்கடியான கால கட்டத்தில் கடவுளை கை காட்டி விட்டு தப்பிவிட முடியாது என்று பலரும் விமர்சித்தனர். கடவுளையே பல மாதங்களாக பூட்டி வைத்திருப்பதால் இனி அரசை நம்புவது பயனில்லை விரைவாக கோவிலை திறங்கள் என்று கோரிக்கையை வைக்கின்றனர் ஆன்மீகவாதிகள். கடவுளிடம் முறையிட்டு கொரோனாவில் இருந்து எங்களை காத்துக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடவுளிடம் வேண்டுதல்

கடவுளிடம் வேண்டுதல்

எந்த ஒரு பிரச்சினை என்றாலும் கடவுளிடம் முறையிடுவதும் வேண்டுதல் வைப்பதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் மக்களின் நம்பிக்கை. கடந்த பல மாதங்களாகவே கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் இறைவனை காண முடியாமல் பல பக்தர்களும் தவித்து வருகின்றனர் நோய் தாக்குதல் பற்றிய அச்சமும் அதிகரித்து வருகிறது.

ஆறாம் கட்ட ஊராடங்கு

ஆறாம் கட்ட ஊராடங்கு

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் தளர்வுகள் இன்றி மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கோவில்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+