குடும்ப அட்டைகள் இல்லாதவர்களுக்கும் உதவிகள் வழங்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இல்லாத நபர்களை கணக்கெடுத்து அவர்களுக்கும் உதவி வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமானத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

To survey the persons who do not have rations cards and help them: HC order to tn govt

இவர்களுக்கு தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இருக்காது என்பதால், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில், உணவு தானியங்களை வினியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அருள் அரசு என்பவர் உயர் நீ்திமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் தமிழகத்தில் குடும்ப அட்டை இல்லாத நபர்களை அரசு உடனடியாக கணக்கெடுத்து அவர்களுக்கும் உதவி வழங்கியது தொடர்பாக நீதிமன்றத்தில் வரும் மே 20-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+