அடித்து நொறுக்கும் வெயில்! தமிழகத்தில் 107 டிகிரியை தொட்ட வெப்பம்..பாதுகாப்பாக இருக்க என்ன செய்யணும்
சென்னை: தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்கியதில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. இன்று மட்டும் 12 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது.
கோடைக் காலத்தில் நமது நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில் வெப்பம் அதிகமாகவே இருக்கும். அதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெப்பம் இப்படித் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. வெப்பம் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
வெப்பம்: இந்தியாவில் இந்தாண்டு பிப். மாதமே வெப்பம் உச்சம் தொட்டது. இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப். மாதம் அதிகபட்ச வெப்பம் பதிவானது. கோடைக் காலத்தில் வெப்பம் இதை விட அதிகமாகவே இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஜன. மாதம் பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், அதன் பின்னர் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இன்றைய தினம் மாநிலத்தில் மொத்தம் 12 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது. அதிகபட்சமாகக் கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தாண்டில் அதிகபட்ச வெப்பம் ஈரோட்டில் நேற்று 106 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவான நிலையில், இன்று வெப்பம் அதை முறியடித்துள்ளது. கரூர் பரமத்தியில் இன்று 107 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இந்தாண்டு பதிவான அதிகபட்ச வெப்பம் இதுவாகும்.
எங்கெல்லாம் சதமடித்து: கரூரை தொடர்ந்து சேலத்தில் 106 டிகிரி பாரன்ஹூட், ஈரோட்டில் 105 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. வேலூர், திருச்சி தலா 104 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல திருத்தணி, திருப்பத்தூர், மதுரை நகரில் 103 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் உள்ளது. தர்மபுரியில் 102 டிகிரி பாரன்ஹூட்டும், கோவையில் 101 டிகிரி பாரன்ஹூட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல பாளையங்கோட்டை, தஞ்சை 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
கோடைக் காலத்தில் வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிகளவில் தண்ணீர், மோர், இளநீரைக் குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகக் குழந்தைகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோடைக் காலங்களில் கான்ஜுன்க்டிவிடிஸ், வறண்ட கண்கள், ஸ்டை மற்றும் கண் அலர்ஜி என்று பல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் கண்களைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். கண்களையும் முகத்தையும் அடிக்கடி கழுவ வேண்டும். அப்போது தான் கண் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.
-
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சினை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி











Click it and Unblock the Notifications