சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா.. ஒரே நாளில் 30,016 பேருக்கு பாதிப்பு.. 8 மாவட்டங்களில் தான் உச்சம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 30,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைக்கு ஒப்பிடும் போது இன்று பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. முழு ஊரடங்கால் பாதிப்பு குறைந்து வருவது தெரிகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 20,39,716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 30,016 பேர் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,39,716 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 31756 பேர் மீண்டனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 17,06,298 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் 3,10,157 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பலி

கொரோனா பலி

தமிழகத்தில் கொரோனா தொற்றால் 486 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை /23,261 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக இன்று கொரோனாவால் சென்னையில் 85 பேர் மரணம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டில் 49 பேரும், காஞ்சிபுரத்தில் 26 பேரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கோவையில் பாதிப்பு அதிகரித்தாலும் உயிரிழப்பு குறைவு என்பது ஆறுதல் செய்த. இன்று கோவையில் 20 பேர் பலியாகி உள்ளனர்.

RT-PCR சோதனை

RT-PCR சோதனை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சோதனைகளையும் தடுப்பூசி வழங்குவதையும் தமிழக அரசு அதிகப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,63,763 பேருக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 660
ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 1,74,349 பரிசோதனைகள் இன்று மட்டும் நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 2,73,38,092 RT-PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

கோவை முதலிடம்

கோவை முதலிடம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருவள்ளூர், சேலம், மாவட்டங்களில் பாதிப்பு ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக இன்று கோவையில் 3692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் இன்று 2705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருப்பூரில் 1697 பேரும், ஈரோட்டில் 1743 பேரும், சேலத்தில் 1492 பேரும், செங்கல்பட்டில் 1314 பேரும், திருச்சியில் 1099 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்

சென்னையில் நோயாளிகள்

சென்னையில் நோயாளிகள்

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தமிழகத்திலேயே சென்னையில் மிக அதிகமாக இருந்து வந்தது. ஆனால் இன்று அதிலும் சென்னையை முந்தி உள்ளது. கோவையில் தற்போது 38824 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் சென்னையில் அதைவிட குறைவாக 38680
பேர் சிகிச்சை பெறுகிறார்கள். இதற்கு அடுத்தபடியாக . திருப்பூர், மதுரை, ஈரோடு, செங்கல்பட்டு, திருச்சி மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெறுகிறார்கள்.

English summary
Today, 30,016 people have been affected by the coronavirus in Tamil Nadu. 3,10,157 active cases on may 29th. 486 died for covid 19 in tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X