சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆளுநர் மாளிகையில் காலை 9 மணிக்கு.. தமிழக முதல்வராக பதவியேற்கும் திமுக தலைவர் மு க ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் காலை 9 மணிக்குத் தமிழக முதல்வராகச் சென்னை ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக, 133 இடங்களில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆட்சி அமைக்க அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உரிமை கோரினார்.

today DMK chief Stalin to sworn as Chief minister and first cabinet meeting on the evening

அதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினை தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று காலை 9 மணியளவில் தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். அவருடன் சேர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

கொரோனா பரவல் காரணமாகப் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது . "கொரோனா காலம் என்பதால் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவை வீட்டிலிருந்தே காணுங்கள். உங்களது உடல் நலம் முக்கியம்" என திமுக தொண்டர்களிடம் அக்கட்சியின் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். பதவியேற்பு விழா முடிந்ததும், காலை 10.45 மணியளவில் அவர் கலைஞர் நினைவிடம், பெரியார் திடல் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கிறார்.

அதைத் தொடர்ந்து அவர் மதியம் 12 மணியளவில் முதல்முறையாகத் தமிழக முதல்வராக ஸ்டாலின் தலைமைச்செயலகம் செல்கிறார். பின்னர், மாலை 4 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டமும், அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது.

English summary
DMK chief Stalin to sworn as Chief minister
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X