இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்.. என்னென்ன ஆவணங்கள் கட்டாயம்.. ஆதார் அட்டை அவசியமா?
சென்னை: இன்று வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்திற்கான சிறப்பு முகாமை தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
வரும் 2024 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதியை ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024-ஐ அறிவித்தது. அது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ ஆலோசனை கூட்டத்தை அக்டோபர் 25 ஆம் தேதி நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்போது படிவங்களின் தீர்வு மேற்கொள்ளுதல் மற்றும் அதன் அட்டவணை குறித்து தெரிவிக்கப்பட்டது.

2024 க்கான சிறப்பு சுருக்க முறை திருத்த கால அட்டவணையை அந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம்அறிவித்தது. அதன்படி அக்டோபர் 27 ஆம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அன்று முதல் டிசம்பர் 9 ஆம் தேதி வரை கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலமாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை அடுத்து இன்றும் நாளையும் 2 ஆம் கட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
வரும் ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இன்று நடைபெறும் முகாமுக்கு செல்பவர்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு ஆகிய அடையாள சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும். ரேஷன் கார்டு அல்லது பாஸ்போர்ட் அல்லது டிஎல் அல்லது பயன்பாட்டு பில் ஆகிய முகவரிச் சான்றிதழ்களையும் அவசியம் வழங்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பது இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. எனவே இந்த முகாமில் ஆதார் எண் அல்லது அட்டை கேட்டு அதிகாரிகள் கட்டாயப்படுத்தினாலும், நீங்கள் அது இல்லாமலேயே விண்ணப்பிக்கலாம்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications