பள்ளிகளுக்கு இன்று அரைநாள்கூட லீவு கிடையாது.. முழு நாளும் பாடம் நடத்த வேண்டும்! தமிழ்நாடு அரசு கறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் இன்று பள்ளிகளுக்கு இன்று விடுமுறை கிடையாது, முழு வேலை நாள் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே வெயில் கொளுத்தி வந்தது.. இதையடுத்து கோடை விடுமுறை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டது.. ஆனால், எப்போதுமே கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டுவிடும்.. ஆனால், இந்த வருடம் ஜுன் 1, 2 சனி, ஞாயிறு என்பதால் 3ம் தேதி திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது.

Tamil Nadu Schools TN Education Department

பள்ளி திறப்பு: ஆனால் ஜூன் 4ம் தேதி, லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக இருந்தது.. அத்துடன் வெயிலும் சுட்டெரித்து கொண்டிருந்தது.. எனவே, பள்ளிகள் திறப்பதை 6ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இறுதியில், வெயில் கொடுமை தாங்காமல், ஜுன் 10ம் தேதிக்கு மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்தவகையில் மாணவர்களுக்கும் கூடுதல் விடுமுறை கிடைத்தது.

தாமதமாக திறக்கப்பட்டதால், விடுபட்ட நாட்களை வேலை நாட்களாக ஈடுகட்ட, சனிக்கிழமைகளில், வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் முழு வேலை நாளாகும்...

பள்ளிக்கல்வித்துறை: அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று முழு நாளும் இயங்க வேண்டும் அரைநாள் மட்டும் பள்ளிகள் நடத்தி விடுப்பு அளித்துவிடக்கூடாது, முழுநாளும் பாடம் நடத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது..

விடுமுறை: நேற்றுகூட 3 மணி நேரம் விடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காணப்படுகிறது. இதையடுத்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+