Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை தினம் இன்று..383வது பிறந்த நாள்.. கனமழையிலும் களைகட்டிய கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 383வது பிறந்த நாள் காணும் வரலாற்று சிறப்பு மிக்க சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கனமழையில் ஆட்டம் பாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடனங்களும் களைகட்டின.

Recommended Video

    TamilNadu Day | தமிழ்நாட்டின் பெருமை மிகு புள்ளிவிபரம் *TamilNadu

    எந்த ஊரை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னை மாநகரம் அவர்களுக்கான தேவையை நிறைவேற்ற தவறியதேயில்லை. வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரம் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க நினைவுகளை தன்னுள்ளே கொண்டுள்ளது.

    தமிழகத்தில் கடைக்கோடி கிராமத்தில் இருந்து வருவோர் முதல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வருவோரையும், கல்விக்காக வெளிநாடுகளில் இருந்து வருவோரையும் சென்னை மாநகரம் அரவணைக்கிறது.

    சென்னை மாநகரம்

    சென்னை மாநகரம்

    சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. 383 ஆண்டுகளில் சென்னை மாநகரம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து சாதித்துள்ளது. எத்தனையோ இயற்கை இடர்பாடுகளை சந்தித்தாலும் அதிலிருந்து விரைவில் மீண்டு விடும் சென்னை மாநகரம். சுனாமியோ, பெருவெள்ளமோ, புயல் மழையோ எதையும் சமாளித்து விடுவார்கள் சென்னை மாநகர மக்கள்.

    383வது சென்னை தினம்

    383வது சென்னை தினம்

    இன்று சென்னைக்கு 383வது பிறந்த நாள் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் மாநகராட்சி இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

    சென்னை தின கொண்டாட்டம்

    சென்னை தின கொண்டாட்டம்


    சென்னை தின கொண்டாட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் சென்னை தினம் கோலாகலமாக நடைபெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இதில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

    கலைநிகழ்ச்சிகள்

    கலைநிகழ்ச்சிகள்

    தமிழ் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவை நடத்தப்பட்டன. விளையாட்டு போட்டிகளுடன் உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.வண்ண விளக்குகள், கேளிக்கை, விளையாட்டுகள் என அந்த பகுதியே திருவிழாக் கோலம் பூண்டது. கனமழை பெய்த போதிலும் சென்னை தினம் உற்சாகமாக ஆட்டம் பாட்டம் என அமர்க்களப்பட்டது.
    மாநகராட்சியின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் இயற்கை உர விற்பனை கடைகளும் அமைக்கப்பட உள்ளன. உணவுத் திடல்கள் மட்டுமின்றி கைவினைப் பொருட்கள். அலங்கார பொருட்கள் விற்கும் 50க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சுற்றுலாத்துறை

    சுற்றுலாத்துறை

    383ஆவது ஆண்டு சென்னை தினத்தை முன்னிட்டு சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பழமை வாய்ந்த மிதிவண்டி கண்காட்சி நேற்று நடைபெற்றது. சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்த கண்காட்சியை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை செயலர் சந்தரமோகன், சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது, அவர்கள் ‘குளோபல் ஹெரிடேஜ் ஆப் மெட்ராஸ்' என்ற புத்தகத்தையும் வெளியிட்டனர்.

    பாரம்பரிய உணவு நடைபயணம்

    பாரம்பரிய உணவு நடைபயணம்

    இந்த கண்காட்சியில் 1800-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. மேலும், பல்வேறு பழமை வாய்ந்த மிதிவண்டி முகப்பு விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. முன்பாக, காலை 5 முதல் 8 வரை சைக்கிளிங் நடைபெற்றது. தொடர்ந்து மிதிவண்டி கண்காட்சியும், மாலை 4 முதல் 6 வரை பாரம்பரிய உணவு நடைபயணமும் நடைபெற்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+