Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லஞ்சம் வாங்கி மாட்டிய அமலாக்கத்துறை அதிகாரி.. ஜாமீன் தள்ளுபடி? உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று பிறப்பிக்க உள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கலை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருரிடம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதற்காக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதான அவர் ஜாமீன் கோரி திண்டுக்கல் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அங்தித் திவாரி மனு தாக்கல் செய்தார்.

Today verdict on the bail plea of enforcement officer Ankit Tiwari arrested in a bribe case

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முன்னிலையாக கால அவகாசம் கோரப்பட்டதால் ஒத்திவைத்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்றபோது உரிய ஆதாரங்களுடன் காவல் துறை கைது செய்ததாகவும், இந்த வழக்கில் அமலாக்கத் துறையின் பல உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அங்கித் திவாரியின் லேப்டாப்பில் தமிழ்நாட்டில் லஞ்ச வழக்கில் சிக்கிய பலரது பெயர்கள் இடம்பெற்று உள்ளதால் போலீஸார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவித்த வழக்கறிஞர் ஜின்னா, வழக்குகள் நிலுவையில் உள்ள பலரை மிரட்டி லஞ்சம் பெற்றேன் என போலீஸாரிடம் அங்கித் திவாரியே ஒப்புக்கொண்டு உள்ளார் என்றார்.

அவரிடம் ரூ. 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மேலும் ரூ. 20 லட்சம் கைப்பற்றப்பட வேண்டியுள்ளதை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், அவருடைய செல்போன், லேப்டாப், ஆவணங்கள் போன்றவற்றை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். அமலாக்கத்துறை அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற போது அவருடைய குரல் பதிவு, விடியோ பதிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் உண்மைத் தன்மை குறித்து கண்டறிவதற்கான சோதனை மேற்கொள்ள வேண்டி உள்ளதாகவும் அவர் வாதிட்டார்.

அங்கித்துக்கு தற்போது ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்று கூறிய அவர், அங்கித் திவாரி சிறையில் உள்ள போதிலும், அமலாக்கத் துறை உயர் அதிகாரிகள் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்காமல், பாதுகாக்க முயற்சி செய்வதாக தெரிவித்தார். மாநில ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில், அங்கித் திவாரி ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய அவர் கேட்டுக்கொண்டார்.

அமலாக்கத்துறை அதிகாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞா், அங்கித் திவாரி மீது எந்த வழக்கும் இல்லை என்றும், லஞ்சம் பெற்றதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸ் பொய் வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+