பாம்பை கையில் தூக்கி வந்த குழந்தை.. பதறி ஓடிய குடும்பத்தினர்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்.. என்னாச்சு
சென்னை: இளம் கன்று பயம் அறியாது என்பது போல குழந்தை ஒன்று கையில் பாம்பை பிடித்து விளையாடியபடி வீட்டிற்கு கையோடு இழுத்து வருகிறது. பாம்பை குழந்தை கொண்டு வருவதை பார்த்ததும் வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் பதறியபடி விலகி செல்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வதுண்டு.. காணக்கூட வேணாம்.. பாம்பு என்று சொன்னாலே பலருக்கு உடல் நடுங்கும்.. அந்த அளவுக்கு மக்கள் மனதில் பாம்பு என்றாலே அலர்ஜி இருக்கும். கொடிய விஷம் கொண்ட பாம்புகள் கடித்தால் உடனடியாக சிகிச்சை எடுக்காவிட்டால் உயிர் பிழைப்பது கடினம் தான். பாம்பு இவ்வளவு ஆபத்தானது என்றாலும் பல இடங்களிலும் பாம்பை வெறும் கைகளினாலே பிடிக்கும் நபர்களை பார்க்க முடிகிறது.

பாம்பு பிடிப்பதற்காக பயிற்சி பெற்றவர்கள் இத்தகைய சாகசங்களில் ஈடுபட்டாலும் சிலர் எந்த பயிற்சியும் பெறாமல் கூட அசாத்திய துணிச்சலுடன் பாம்புகளை பிடிப்பதையும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் காண முடியும். சில நேரங்களில் பாம்பை இப்படி பிடிக்கும் நபர்களை அது தீண்டி, உயிர் போன சம்பவங்களும் நடந்துள்ளது. சரி இங்கே விஷயத்திற்கு வரலாம்.
சமுக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக 2 அல்லது 3 வயது மதிக்கத்தக்க குழந்தை பாம்பை வெறும் கையில் பிடித்து இழுத்த்துக் கொண்டு வரும் காட்சிகள் பரவி வருகின்றன. வீட்டிற்குள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஒரு குழந்தை ஆபத்தை சற்றும் உணராமல் பாம்பு ஒன்றின் வாலை பிடித்தபடி வீட்டிற்குள் எந்த சலனமும் காட்டாமல் வருகிறது.
குழந்தை விளையாடிவிட்டு வருகிறது என்று முதலில் குடும்பத்தினர் பெரிதாக கண்டுக்கொள்ளாமல் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அடுத்த நொடியே, குழந்தையின் கையில் வைத்திருக்கும் பொருள் நெளிகிறதே என கவனித்த குடும்பத்தினர் பட படவென்று எழும்பி ஆங்காங்கே சிதறி ஓட தொடங்குகின்றனர். ஒன்றும் அறியாத அந்த சுட்டிக்குழந்தையும் என்ன நடக்கிறதே என்று புரியாமல் விழித்துக் கொண்டு நிற்கிறது.
அதற்குள் மற்றொரு நபர் அந்த குழந்தையை வேக வேகமாக வீட்டிற்கு வெளியே இழுத்து செல்லும் காட்சிகள் அடங்கியுள்ளன. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோதான் சமூக வலைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் குடும்பத்தினர் பொறுப்பற்று செயல்படுவதாக விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல், மற்றொரு நபர், "வீடியோ எடுத்த நபர், குழந்தையை முதலிலே பாம்பை பிடிப்பதை தடுத்து இருக்க வேண்டாமா? " என்று கேள்வி எழுப்பி சாடியுள்ளார். மற்றொரு நெட்டிசன் சற்று ஜாலியாக, நான் எனது முன்னாள் காதலியை வீட்டிற்கு அறிமுகப்படுத்திய போது என் வீட்டில் உள்ளவர்களின் ரியாக்ஷன் இப்படித்தான் இருந்தது என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications