தமிழ்நாடு.. ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள்.. ரூ.2000 பணம்.. டோக்கன் சப்ளை ஆரம்பம்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 14 வகையான மளிகை பொருட்களுக்கான டோக்கன் ரேஷன் கடை ஊழியர்களால் இன்று முதல் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனாவால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கருணாநிதி பிறந்த நாளில் 4000 வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, திமுக ஆட்சிக்கு வந்ததும், கொரோனா நிவாரண தொகைக்கான முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை கடந்த மே மாதம் 10ம் தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இரண்டாவது தவணை பணம்
இதையடுத்து, ஜூன் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகைக்கான இரண்டாவது தவணை 2000 வழங்கும் திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 4196.38 கோடி செலவாகும் இந்த திட்டத்தால் 2,09,81,900 ரேஷன் கார்டுதாரர்கள் பலன் பெறுவார்கள்.

14 அத்தியாவசிய பொருட்கள்
அதே நாளில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.844.51 கோடி செலவில், 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

வீடுகளுக்கே சென்று டோக்கன்
இதைத்தொடர்ந்து ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருள் தொகுப்பை வருகிற 15ம் தேதி முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் வாங்கிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக இன்று 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை ரேஷன் கடை பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று காலை முதல் டோக்கன் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.

எந்த தேதி, நேரம் என குறிப்பிடப்பட்டிருக்கும்
ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 200 பேர் வரை ரேஷன் கடைகளுக்கு வந்து கொரோனா நிவாரண தொகை மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை வாங்கிச் செல்லும் வகையில் டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது. டோக்கனில் எந்த தேதி, நேரத்தில் ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க வேண்டும் என்று எழுதி கொடுக்கப்படும்.
டோக்கன் கிடைக்காதவர்கள், வெளியூர் சென்றுள்ளவர்கள் இந்த மாத இறுதி வரை தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண பொருட்களை ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன் கிடைக்காதவர்கள், வெளியூர் சென்றுள்ளவர்கள் இந்த மாத இறுதி வரை தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண பொருட்களை ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications