சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தின் 24 சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு! எந்தெந்த டோல் கேட் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவுக்கு பின், கட்டணம் உயர்கிறது. 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயரப் போகிறது.

தமிழ்நாட்டில் 6,606 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. அதில், 1,472 கி.மீ சாலைகள் மத்திய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

 சென்னையை விட்டு தென் மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுப்பு.. திணறும் பரனூர் சுங்கச்சாவடி! சென்னையை விட்டு தென் மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுப்பு.. திணறும் பரனூர் சுங்கச்சாவடி!

 அதிக கட்டணங்கள்

அதிக கட்டணங்கள்

பொதுவாக சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். பிறகு, 40 சதவீத சாலை பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டிலோ, 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 10 சதவீத அளவிற்கு சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

 இன்று நள்ளிரவு அமல்

இன்று நள்ளிரவு அமல்

இதன்படி தமிழகத்திலுள்ள 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவுக்கு பிறகு, சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வுக்கு, பல்வேறு கட்சி தலைவர்கள், ஆம்னி பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காதில் போட்டுக் கொள்வதாக இல்லை.

 அத்தியாவசிய பொருட்கள் விலை

அத்தியாவசிய பொருட்கள் விலை

சுங்க கட்டணம் உயர்வால் தனி நபர் வாகனங்களான கார் போன்றவற்றை இயக்குபவர்களுக்கு கட்டணம் உயருவதோடு, சரக்கு வாகனங்களுக்கு டோல் கட்டணம் அதிகரித்தால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயரும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி ஏறிவிட்ட நிலையில், டோல் கேட் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

 எந்த டோல்கேட்கள்

எந்த டோல்கேட்கள்

எந்தெந்த டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்படுகிறது அது எந்த ஊர்களுக்கு இடையே அமைந்த டோல்கேட்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  • ஆத்தூர் (தாம்பரம்-திண்டிவனம்)
  • நல்லூர் (சென்னை - தடா)
  • பரனூர் (தாம்பரம்- திண்டிவனம்)
  • சூரப்பட்டு (சென்னை பைபாஸ்)
  • வானகரம் (சென்னை பைபாஸ்)
  • வாணியம்பாடி (கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை)
  • கிருஷ்ணகிரி (ஓசூர்-கிருஷ்ணகிரி)
  • லம்பலக்குடி (திருச்சி-காரைக்குடி)
  • லட்சுமணப்பட்டி (திருச்சி-காரைக்குடி)
  • போகலூர் (மதுரை-ராமநாதபுரம்)
  • நாங்குநேரி (நெல்லை-அஞ்சுகிராமம்)
  • பூதக்குடி (திருச்சி பைபாஸ்-தோவரங்குறிச்சி-மதுரை)
  • பழையா (கந்தர்வகோட்டை, தஞ்சாவூர்-புதுக்கோட்டை)
  • பள்ளிகொண்டா (கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை)
  • சித்தம்பட்டி (திருச்சி பைபாஸ்,
  • தோவரங்குறிச்சி-மதுரை)
  • பட்டரைப்பெரும்புதூர் (திருப்பதி-திருத்தணி-சென்னை)
  • புதுக்கோட்டை (வாகைக்குளம்)
  • (திருநெல்வேலி-தூத்துக்குடி)
  • எஸ் வி புரம் (திருப்பதி-திருத்தணி-சென்னை)
  • சாலைப்புதூர் (மதுரை-திருநெல்வேலி-
  • பனகுடி-கன்னியாகுமரி)
  • செண்பகம்பேட்டை (திருமயம்-மானாமதுரை)
  • எட்டூர்வட்டம் (மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி)
  • திருப்பாச்சேத்தி (மதுரை-ராமநாதபுரம்)
  • கணியூர் (செங்கப்பள்ளி-கோவை பைபாஸ்)
  • கப்பலூர் (மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி)

English summary
Tamil Nadu toll gates fees: Charges increased by three to five per cent at 24 toll gates on National Highways in State from Thursday (April 1). Toll fee was hiked by Rs 5 to Rs 15 for all categories of vehicles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X