Toll price: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! Fastag கட்டணமும் உயர்கிறது! மக்கள் அதிர்ச்சி!
சென்னை: தமிழகத்தில் உள்ள திண்டிவனம், ஆத்தூர் உள்பட 66 சுங்கச் சாவடிகளில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு பலதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 77 சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன. அவற்றுக்குள் சில சுங்கச் சாவடிகளுக்கு ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும். அது போல் சில சுங்கச் சாவடிகளுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் .

அதன்படி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் திண்டிவனம், ஆத்தூர், கணியூர், கப்பலூர், கீழ் குப்பம், கிருஷ்ணகிரி, மாத்தூர், நாங்குநேரி, ஸ்ரீபெரும்புதூர், பரனூர், திருப்பாச்சேத்தி, வானகரன், விராலிமலை, வாணியம்பாடி உள்பட 66 சுங்கச் சாவடிகளில் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இதனால் தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட கார், ஜீவ், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ 10 முதல் ரூ 40 வரையும், லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ 50 முதல் ரூ 200 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.
இது போல் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ 300 முதல் ரூ 350 வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. மேலும் ஆண்டுதோறும் பாஸ்டேக் பாஸ் விலையை ரூ 3 ஆயிரத்திலிருந்து ரூ 3075 ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கெனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் தற்போது சுங்கக் கட்டண உயர்வால் மேலும் கூடுதல் சுமை ஏற்படும் நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications