உச்சம் தொடும் தக்காளி.. சென்னையில் ரூ.200ஐ தொடும் ஒரு கிலோ தக்காளி.. எப்போது தான் விலை குறையும்
சென்னை: தக்காளி வரத்து தொடர்ந்து குறைவாக இருக்கும் நிலையில், இன்று கோயம்பேடு சந்தையில் ஒரே நாளில் தக்காளி விலை ரூ.20 உயர்ந்துள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் தக்காளி விலை ரூ.200ஐ தொடும் என அஞ்சப்படுகிறது.
நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தக்காளிச் செடிகளிலேயே அழுகிவிடுவதால் தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி சென்னை ரூ.100ஐ தாண்டியது. இதனால் சில்லறை விற்பனையில் தக்காளி விலை ரூ. 180 வரை சென்றது. இடையில் தக்காளி விநியோகம் சற்றே சீரடைந்தது. இதனால் விலையும் குறைந்தது.
தக்காளி: அப்போது தக்காளி விலை கிலோ ரூ. 70 வரை கூட குறைந்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாகத் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ 140க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை மளமளவென உயர்ந்து வருகிறது. இதனால் சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை மீண்டும் உயர்வைச் சந்தித்துள்ளது.
தக்காளி விலை இன்று ஒரே நாளில் ரூ.20 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.160க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.20 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 180க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.200ஐ தொடும் தக்காளி: கடந்த 8 நாட்களில் மட்டும் சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 ரூபாய்க்குத் தக்காளி விற்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக அதிகரித்த தக்காளி விலை இப்போது ரூ. 180ஐ தொட்டுள்ளது. சில்லறை விலையில் தக்காளி விலை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. சில இடங்களில் தக்காளி விலை ரூ. 200ஐ தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வறண்ட வானிலை இருந்தாலும் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாகத் தக்காளிச் செடிகளிலேயே அழுகிவிடுவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையால் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. இந்த இரண்டும் சேர்ந்து தக்காளி வரத்தைக் குறைத்துவிட்டது. இதன் காரணமாகவே தக்காளி விலை அதிகரித்துள்ளது.
எப்போது குறையும்: மொத்த விற்பனை செய்யப்படும் கோயம்பேடு சந்தையிலேயே தக்காளி விலை ரூ.180ஐ எட்டியுள்ள நிலையில், நகரில் பல இடங்களில் சில்லறை வர்த்தகத்தில் தக்காளி விலை ரூ.200ஐ தொட்டுள்ளது. தக்காளி விலை இப்படித் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளி விலையைக் குறைக்கவும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குக் குறைந்த விலையில் தக்காளி கிடைக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
வரத்துக் குறைவு காரணமாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.. நாட்டின் மழை இடங்களிலும் இன்னுமே கனமழை கொட்டி வரும் நிலையில், வரத்துச் சீராக இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே தக்காளி விலை மெல்ல குறையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications