ரூ.10க்கு உதைப்பட்ட தக்காளிக்கு வந்த வாழ்வை பாருங்க! கோயம்பேட்டில் ஏழைகளின் ஆப்பிளின் விலை தெரியுமா?
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை கிலோ ரூ 40 ஆக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கு தமிழகத்தில் நிலவிய வெயிலும் தொடர் மழையும் காரணம் என சொல்லப்படுகிறது. தமிழகம் மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயில் வாட்டியது.

இதையடுத்து மே மாதம் 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கியது. இந்த கத்தரி வெயில் சுட்டெரிக்கும் என அஞ்சிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்தது.
இப்படி வெயிலும், அதிக காற்றுடன் கனமழையும் பொதுவாக நுட்பமான காய்கறிகள், பழங்கள் சேதமாகிவிடும். அந்த வகையில் கோடை மழை, கோடை வெயிலால் தக்காளி மொத்த விலையில் உயர்ந்துள்ளது. திருவல்லிக்கேணி ஜாம்பஜார், சைதாப்பேட்டை, பெரம்பூர் போன்ற சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ 55க்கு விற்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான பீன்ஸ் கிலோ 120 , அவரைக்காய் ரூ 70, பச்சை மிளகாய் ரூ 55, சாம்பார் வெங்காயம் ரூ 35, கேரட், நூல்கோல், முள்ளங்கி தலா ரூ 30, உருளைக்கிழங்கு ரூ 26, பீட்ரூட் 23 ரூ, பாகற்காய், வெண்டைக்காய், புடலங்காய் தலா ரூ 20, கத்தரிக்காய், கருணைக் கிழங்கு தலா ரூ 15, முட்டைக்கோஸ், முருங்கைக்காய் தலா ரூ 10 என விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளிகளை அனுப்பும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள சிந்தாமணி, பலமனேரி உள்ளிட்ட பகுதிகள், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் தக்காளி வாங்க வியாபாரிகள் குவிந்து வருகிறார்கள். இதனால் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துவிட்டது. இதனால் விலை அதிகரித்துள்ளது.
ஜூன் மாதம் முழுவதும் தக்காளி விலை உயர்ந்தே இருக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்றைய காய்கறிகளின் விலை:
பீன்ஸ் கிலோ ரூ 60 முதல் ரூ 220 வரை விற்பனையாகிறது. பீட் ரூட் கிலோ ரூ 20 முதல் ரூ 78 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் ரூ 15 முதல் 80 வரையும் முட்டைக் கோஸ் ரூ 12 முதல் ரூ 50 வரையும் கேரட் ரூபாய் 30 முதல் 90 வரையும் மிளகாய் ரூ 35 முதல் ரூ 120 வரையும், முருங்கைகாய் ரூ 10 முதல் ரூ 80 வரையும் இஞ்சி ரூ 100 முதல் 220 வரையும் , உருளைக்கிழங்கு ரூ 25 முதல் ரூ 85 வரையும், சின்ன வெங்காயம் கிலோ ரூ 30 முதல் 80 ரூபாய், தக்காளி ரூ 20 முதல் ரூ 55 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
-
நீ நல்லா 'சாப்பிட்டிருக்க'.. நான் இன்னும் சாப்பிடல.. கிளாம்பாக்கத்தில் அமைச்சர் பேசியது ஏன்? -
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் தமிழன் பார்த்திபனை கேள்விகளால் துளைத்த மக்கள் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications