மோசமாகும் நிலைமை... தங்கம்போல் உயரும் தக்காளி விலை! தமிழகத்தில் தட்டுப்பாடு - என்ன காரணம்?
சென்னை: கோயம்பேடு சந்தைக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால் இன்று கிலோ தக்காளி விலை ரூ.70 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தேனி, ஓசூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து தக்காளி டன் கணக்கில் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து இருப்பதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தக்காளி தட்டுப்பாடு
நேற்று வெறும் 42 லாரிகளில் மட்டுமே தக்காளி சென்னை கோயம்பேடு சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. லாரிகளில் தக்காளி வந்தவுடனே வியாபாரிகள் அவற்றை வாங்கிச் சென்றதால் உடனடியாக தக்காளி காலியானது. இதனால் பலர் வெறும் கையுடன் திரும்பினர். இதன் காரணமாக பல பகுதிகளில் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

விலை நிலவரம்
தக்காளி தட்டுப்பாடு காரணமாக சில்லறை கடைகளில் கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.70 ஆக அதிகரித்து இருக்கிறது. மொத்த விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.55க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காய்கறி சந்தைகளில் உள்ள சில்லரை விற்பனை கடைகளிலும் தக்காளி விலை ரூ.60 முதல் ரூ.70க்கு விற்பனையாகி வருகிறது.

கோடை மழை
ஒரு பெட்டி தக்காளி ரூ.550க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.700 க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் எதிர்பாராத விதமாக கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதால் குறைவான அளவிலேயே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதால் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
Recommended Video

ஆந்திரா, கர்நாடகா
இதன் காரணமாக வியாபாரிகள் நேரடியாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சென்று தக்காளியை வாங்கி தமிழ்நாடு கொண்டு வந்தனர். ஆனால், அசானி புயல் காரணமாக ஆந்திராவிலும் கனமழை பெய்து வருவதால் அங்கும் தக்காளி உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்து இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தக்காளி வரத்து குறைந்து கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications