ஆடிய ஆட்டம் என்ன..ரூ.150க்கு விற்ற தக்காளி கடும் வீழ்ச்சி..கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.7க்கு விற்பனை
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது., ஒரு கிலோ தக்காளி வெறும் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.150 வரை சென்ற நிலையில் தற்போது சரிந்துள்ளது. கடந்த மாதம் முழுக்க இந்தியா முழுக்க தக்காளி விலை வேகமாக உயர்ந்து வந்தது. தமிழ்நாட்டிலும் கடந்த மாதம் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.

ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹100 என்ற விலையில், தக்காளியின் விலை சந்தையில் விற்கப்பட்டது. அதன்பின் 100 ரூபாய் விற்கப்பட்ட தக்காளி மேலும் 20 ரூபாய் உயர்ந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் சில நாட்களில் மேலும் உயர்ந்து 150 ரூபாயை எட்டியது. இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டது. ஜூலை மாதம் இதற்காக தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் பல ஹோட்டல்களில் தக்காளி இல்லாமல் உணவு சமைக்கப்பட்டது. தக்காளி பயன்படுத்தப்படும் உணவுகளின் விலைகள் உயர்ந்தது. பெரிய அமெரிக்க உணவகங்கள் கூட இந்தியாவில் தக்காளி இல்லாமல் சமைக்க தொடங்கின. காலம் மாறிய மழை, தக்காளி உற்பத்தி குறைவு இவையே தக்காளி விலை உயர்விற்கு காரணம் ஆகும்.

தக்காளி விலை உயர்வால் ஒரே நாளில் சில கோடிஸ்வரர்கள் ஆன சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தக்காளி உற்பத்தி கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது., ஒரு கிலோ தக்காளி வெறும் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.150 வரை சென்ற நிலையில் தற்போது சரிந்துள்ளது.
மற்ற பொருட்கள்: தமிழ்நாட்டில் தக்காளி விலை சரிவிற்கு இடையில் தற்போது துவரம் பருப்பின் விலையும் சரிந்து உள்ளது. தக்காளி இல்லாமல் கூட தமிழ்நாட்டில் குடும்பம் நடத்திவிடலாம். ஆனால் துவரம் பருப்பு மிகவும் அவசியம். அதிலும் சைவம் சாப்பிடுபவர்களுக்கு துவரம் பருப்பு மிக முக்கிய புரத சத்து கொடுக்கும் பொருள். அதன் விலையும் சரிந்துள்ளது. துவரம் பருப்பின் விலை ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. கடந்த மாதம் 140- 170 ரூபாய்க்கு விற்ற பருப்பு தற்போது 50-60 ரூபாய் வரை குறைந்துஉள்ளது. அண்டை மாநிலங்களில் விளைச்சல் கம்மியாக இருப்பதால் பருப்பு விலை உட்பட மளிகை பொருட்களின் விலை குறைந்து உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications