தக்காளி விலை மீண்டும் சரிவு.. கோயம்பேடு மார்க்கெட்டில் பாதியாக குறைந்த விலை! என்ன காரணம்?
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி விலை சரிந்துள்ளது. கடந்த 2 நாட்களாக மொத்த விற்பனையில் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வெயில் மற்றும் தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் தக்காளி கிலோ ரூ.70 வரை உயர்ந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் தக்காளி வரத்து குறைந்து கடந்த 2 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மீண்டும் ரூ.70 - ரூ. 80 ஆக உயர்ந்தது. சில்லறை விற்பனையில் ரூ. 100 வரை தக்காளி விற்பனையானது.
சமையல்களில் முக்கிய இடம் பிடிப்பது தக்காளி, வெங்காயம் தான். இவை இரண்டும் இல்லாத சமையலே இல்லை என்று கூட சொல்லலாம். இந்த நிலையில் தக்காளி விலையேற்றம் இல்லத்தரசிகளையும், பொதுமக்களையும் கலக்கமடையச் செய்தது.
இந்நிலையில் தக்காளி விலை மீண்டும் சரிந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ. 80க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ. 45 க்கு விற்பனை ஆகிறது. ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது. தக்காளி விலை பாதியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications