கோயம்பேடு மார்க்கெட்டில்.. ஒரு முருங்கைக்காய் 40 ரூபாய்.. தக்காளி விலையை கேட்டால் தலையே சுற்றிவிடும்
சென்னை: பொதுவாக சபரிமலை சீசன் மற்றும் பழனி சீசன் என்று அழைக்கப்படும் கார்த்திகை மற்றும் மார்கழிமாதங்களில் பலர் அசைவம் சாப்பிட மாட்டார்கள். காய்கறிகள் தான் உணவாக சேர்ப்பார்கள். குறிப்பாக வீடுகளில் சாம்பார் தான் அதிகம் வைக்கப்படும். இந்த சூழலில் சாம்பாருக்கு அதிகம் பயன்படும், தக்காளி, சின்ன வெங்காயம், முருங்கைக்காய் என மூன்று கடுமையாக விலை ஏறி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் விலையை கேட்டால் தலையே சுற்றிவிடும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மிகப்பெரிய காய்கறி விற்பனை சந்தை என்றால்.. அது செனனை கோயம்பேடு காய்கறி சந்தை தான். தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் காய்கறிகள் வருகின்றன. அப்படி வரும் காய்கறிகள், சென்னையின் தினசரி தேவையை பூர்த்தி செய்கின்றன. ஒவ்வொரு காய்கறியும் இத்தனை டன் தேவை என்றுவிற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. ஆனால் தேவை அதிகம் ஆகும் போதும், சப்ளை குறையும் போதும், டிமாண்ட் அதிகரித்து விற்பனை குறைந்துவிடுகிறது.

அந்தவகையில் வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. முருங்கைக்காய் இம்மாதம் தொடக்கத்தில் ரூ.60 முதல் ரூ.80 வரை இருந்த நிலையில், 2-வது வாரத்துக்கு பிறகு ஒரு கிலோ ரூ.100-ஐ தாண்டியும், கடந்த வாரம் ரூ.200-ஐ கடந்தும் விற்பனையானது.
தொடர்ச்சியாக தேவை அதிகரிப்பு மற்றும் வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்து கொண்டே வந்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ ரூ.320 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது. விலையை கேட்டாலே 'ஷாக்' அடிக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. வெளிமார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ஒரே ஒரு முருங்கைக்காயின் விலை ரூ.40 என்கிறார்கள்.
முருங்கை விலை மட்டுமல்ல தக்காளியும், சாம்பார் வெங்காயமும் எகிறி வருகிறது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை விற்கப்பட்ட தக்காளி, நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் நேற்று ரூ.60 முதல் ரூ.80 வரையிலும் விற்பனையாகிறது. வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் இதன் விலை ரூ.70 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications