ரேஷன் கடைக்கு போனால் ஷாக்.. வரிசையில் நின்ற மக்களுக்கு வந்த பதில்.. ஆ இங்கேயும் வந்துடுச்சா!
சென்னை: தமிழ்நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றும் தக்காளி விலை ரூபாய் 10 முதல் 20 வரை உயர்ந்தது. தக்காளி உயர்வு காரணமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ரேஷன் கடைகளிலும் ரேஷன் கடைகளுக்கும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
ரேஷன் கடைகள்: இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காலை 1- 2 மணி நேரம் மட்டுமே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ஒரு அட்டைக்கு 1 கிலோ மட்டுமே தக்காளி கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தக்காளி விலை காரணமாக ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
தக்காளி விலை: கடந்த 2 வாரமாக இந்தியா முழுக்க தக்காளி விலை வேகமாக உயர்ந்து வந்தது. தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.
ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹110 என்ற விலையில், தக்காளியின் விலை சந்தையில் விற்கப்பட்டது. நேற்று 110 ரூபாய் விற்கப்பட்ட தக்காளி இன்று மேலும் 10 - 20 ரூபாய் உயர்ந்து 120 - 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தக்காளி இல்லை: இந்த நிலையில் ரேஷன் கடைகளிலும் ரேஷன் கடைகளுக்கும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.அதன்படி தக்காளி பெரிதாக ரேஷன் கடைகளில் கிடைப்பது இல்லை. முதலில் வரும் 10 -15 மக்களுக்கு மட்டுமே தக்காளி கிடைக்கிறது. அதன்பின் வருபவர்களுக்கு தக்காளி கிடைப்பது இல்லை என்று கூறப்படுகிறது.
காலையிலேயே மக்கள் வந்து லைனில் நிற்க தொடங்கி விடுகிறார்கள். 9 மணிக்கு ரேஷன் கடை திறந்தாலும் கூட 8 மணிக்கே மக்கள் வந்து லைனில் இருக்கும் நிலை உள்ளது. இன்று சென்னையில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட 90 ரேஷன் கடைகளிலும் 20 - 30 அடிக்கு நீண்ட லைன் நின்றது. ஆனாலும் பலருக்கும் குறைந்த விலையில் தக்காளி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. வரும் நாட்களில் ரேஷன் கடைகளில் கூடுதல் தக்காளி இதனால் விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை குறைவு: ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டதாக மக்கள் மார்க்கெட்டில் தக்காளி வாங்குவது குறைந்தது. இதனால் மார்க்கெட்டில் தக்காளி தேக்கம் ஏற்பட்டது. தக்காளிக்கான தேவை மார்க்கெட்டில் குறைந்த நிலையில் தானாக ஒரே நாளில் அதிரடியாக தக்காளி விலை குறைந்தது.
அதன்படி கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளி கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. ஆனால் தற்போது வரத்து மேலும் குறைந்ததால் குறைந்த தக்காளி மீண்டும் உயர்ந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications