குட் நியூஸ்.. ரேஷன் விற்பனை எதிரொலி.. ஒரே நாளில் 40 ரூபாய் சரிந்த தக்காளி விலை.. இப்போ என்ன ரேட்?
சென்னை: தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வு காரணமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ரேஷன் விற்பனையால் தக்காளிக்கான தேவை குறைந்த நிலையில் மார்க்கெட்டிலும் தக்காளி விலை குறைந்தது.
கடந்த 2 வாரமாக இந்தியா முழுக்க தக்காளி விலை வேகமாக உயர்ந்து வந்தது. தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.

ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹100 என்ற விலையில், தக்காளியின் விலை சந்தையில் விற்கப்பட்டது. நேற்று 100 ரூபாய் விற்கப்பட்ட தக்காளி இன்று மேலும் 20 - 30 ரூபாய் உயர்ந்து 120 - 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரேஷன் கடைகள்: இதையடுத்து தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. தக்காளி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலை 1- 2 மணி நேரம் மட்டுமே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ஒரு அட்டைக்கு 1 கிலோ மட்டுமே தக்காளி கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தக்காளி விலை காரணமாக ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
காலையிலேயே மக்கள் வந்து லைனில் நிற்க தொடங்கி விடுகிறார்கள். 9 மணிக்கு ரேஷன் கடை திறந்தாலும் கூட 8 மணிக்கே மக்கள் வந்து லைனில் இருக்கும் நிலை உள்ளது. இன்று சென்னையில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட 90 ரேஷன் கடைகளிலும் 20 - 30 அடிக்கு நீண்ட லைன் நின்றது. வரும் நாட்களில் ரேஷன் கடைகளில் கூடுதல் தக்காளி இதனால் விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை குறைவு: ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டதாக மக்கள் மார்க்கெட்டில் தக்காளி வாங்குவது குறைந்தது. இதனால் மார்க்கெட்டில் தக்காளி தேக்கம் ஏற்பட்டது. தக்காளிக்கான தேவை மார்க்கெட்டில் குறைந்த நிலையில் தானாக ஒரே நாளில் அதிரடியாக தக்காளி விலை குறைந்தது.
அதன்படி கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளி கிலோவுக்கு ரூ.40 குறைந்தது. தக்காளி கிலோ ரூபாய் 80 மற்றும் 90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் நேற்று ரூ.130க்கு விற்பனையான நிலையில், ஒரு வாரத்திற்கு பின் தக்காளி விலை கணிசமாக குறைந்தது. தக்காளி விலை சரிவு காரணமாக மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர். போதிய தக்காளி வரத்து இன்னும் இல்லை என்றாலும் ரேஷன் கடைகளில் விற்பனை தொடங்கி உள்ளதாக மார்க்கெட்டில் 80 ரூபாய்க்கு தக்காளி விற்பனை ஆகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications