‛‛நாளை நீங்களே ஆளுநர் ஆகலாம்’’.. சட்டசபையில் நயினார் நாகேந்திரனை கலாய்த்த சபாநாயகர் அப்பாவு.. கலகல
சென்னை: தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை பார்த்து ‛‛நாளை நீங்களே ஆளுநர் ஆகலாம்'' என கையை விரித்து சபாநாயகர் அப்பாவு கூறியது சபையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசு ஒப்புதலுக்காக அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்நிலையில் இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடந்து வருகிறது.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது. முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்தார்.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு அந்த தனித்தீர்மானத்தின் மீது விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது தனித்தீர்மானம் மீது மட்டுமே உறுப்பினர்கள் பேச வேண்டும். நம்முடைய சட்டமன்ற மரபு, மாண்பு, இறையான்மையை பாதுகாத்திட வேண்டும். குடியரசு தலைவர், நீதிமன்றங்கள், ஆளுநர்கள் பற்றியோ எந்த விதமாக கருத்துக்களையும் சொல்ல வேண்டியதில்லை. அதற்கான அனுமதி உங்களுக்கு மறுக்கப்படுகிறது. ஏற்கனவே உங்களுக்கு இது தெரிந்த ஒன்று தான். ஆகவே நம்முடைய முதல்வர் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் மட்டும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் உள்பட பிற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பேசி 10 மசோதாக்களை மறுஆய்வு செய்யும் முதல்வர் ஸ்டாலினின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த வேளையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛பேரவைத்தலைவரே, இன்றைக்கு முதல்வர் கொண்ட வந்த தீர்மானத்தின் மீது பேசும்போது நீங்கள் கூட ஆரம்பத்திலேயே சொன்னீர்கள். இதில் மத்திய அரசையோ, ஆளுநரையோ யாரையும் குறைத்து பேசக்கூடாது என்றீர்கள்'' என்றார். இந்த வேளையில் சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, ‛‛குடியரசு தலைவர், நீதிமன்றங்கள், ஆளுநர்'' என்றார்.

இதையடுத்து நயினார் நாகேந்திரன், ‛‛ஆளுநரை பற்றி பேசக்கூடாது என சொல்லி இருந்தீர்கள். பேசக்கூடாது என சொல்லிவிட்டு பேசவிட்டு கேட்டு கொண்டு இருக்கிறீர்கள்'' என்றார். அப்போது குறுக்கிட்ட அப்பாவு, ‛‛ஒரு நிமிடம்.. கோப்புகள் தொடர்பாக அவர் எடுத்த முடிவுகளை பற்றி தான் பேசுகிறார்களே தவிர.. தனிப்பட்ட முறையில் பேசிய வார்த்தைகள் எதுவும் பதிவாகவில்லை'' என்றார்.
அதை கேட்ட நயினார் நாகேந்திரன், ‛‛தீர்மானங்கள் என்பது வேறு. ஆளுநர் திருப்பிய அனுப்பியதால் முதல்வர் தனித்தீர்மானம் கொண்டு வந்தது என்பது வேறு. அதை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பது வேறு'' என்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ‛‛எந்த ஆளுநர் கையெழுத்திட்டு திருப்பி அனுப்பினார்களோ? அந்த கருத்தை தான் சொல்லி இருக்கிறார்கள். ஆளுநர் என்பவர்கள் மாறலாம். நாளைக்கு நீங்களே ஆளுநர் ஆகலாம்'' எனக்கூறிவிட்டு கையை விரித்து சிரித்தார். இதை கேட்ட பிற உறுப்பினர்கள் சிரித்தனர். நயினார் நாகேந்திரனும் சிரித்தபடி தனது பேச்சை தொடர்ந்தார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications