இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 05/03/2026: ஸ்டாலின் முதல் செங்கோட்டையன் வரை அனல் பறக்கும் கருத்துகள்!
சென்னை: திமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை, திமுகவில் ஓபிஎஸ் இணைந்தது உள்பட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பேசியவற்றை பார்க்கலாம்.

முதல்வர் ஸ்டாலின்
திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் முடிந்ததை All Finished என சைகை மூலம் காட்டியது திட்டமிட்ட ஒன்றல்ல.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை முடிவாகி இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில் அறிவிக்கப்படும். அதிமுக சார்பில் 3 கட்டங்களாக 16 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதை வீடு வீடாக கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
நயினார் நாகேந்திரன்
திமுகவிடம் கடுமையாக போராடிதான் காங்கிரஸ் 28 சீட்களை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் எங்களுக்கு எத்தனை சீட் என்பதை கட்சி தலைமை அமர்ந்து பேசி முடிவெடுக்கும்.
செங்கோட்டையன்
திமுக- காங்கிரஸ் கூட்டணி நீண்ட காலம் பயணித்து வருகிறது. ஆனால் சில மனமாச்சரியங்கள் வந்திருக்கின்றன. தவெகவால் காங்கிரஸுக்கு பலன் கிடைத்திருக்கிறது. என்டிஏ கூட்டணியாக இருந்தாலும் சரி , திமுக கூட்டணியாக இருந்தாலும் சரி எங்களை காட்டி கூடுதல் சீட் பெறும் நிலைதான் தற்போது இருக்கிறது.
எல்.கே.சுதீஷ்
தேமுதிக தலைவர் விஜய்காந்தின் கனவு நனவானது. தேமுதிக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறுகிறது. டெல்லியில் விஜயகாந்தின் முகமாக செயல்படுவேன்.
விந்தியா
காரில் இருந்த அம்மா புகைப்படத்தை ஓபிஎஸ் எடுத்து விட்டார்.. கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை வெட்டி எடுத்துட்டார்..! ஆனால் அவருடைய கார், அவர் வீடு இதெல்லாம் எங்கிருந்து வந்தது..?
செந்தில் பாலாஜி
கரூரின் 4 தொகுதிகளிலும் திமுக அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறும். எதிர்பார்ப்பதற்கு மேலாக 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெற்று 2-வது முறை ஸ்டாலின் முதல்வராவார்.
கார்த்தி சிதம்பரம்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன். அதற்காக நான் எப்போதும் ஈரான் ஆட்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டேன். அவர்கள் அந்நாட்டு மக்களையே துன்புறுத்தினர். விலைவாசி உயர்வுக்கு எதிராக போராடிய 7,000 பேர் இறந்துள்ளனர்.
ஓ.பன்னீர் செல்வம்
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் எங்களை தாயன்புடன் அரவணைத்து திமுகவில் இணைத்துள்ளார். அவருக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய திமுக ஆட்சியில், அடித்தட்டு மக்களுக்கு எது தேவையோ அதைப் புரிந்து அவர்களுக்கான உதவியை முதல்வர் செய்து வருகிறார். எனவே, இந்த ஆட்சி தொடர வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் தங்களின் ஆதரவை தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீமான்
மாநிலத்துக்கான கல்வி உரிமையை பறித்தது காங்கிரஸ் கட்சி, அதை வேடிக்கை பார்த்தது திமுக. இவர்கள் மாநில உரிமையை பற்றி பேசுகின்றனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications