இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 10/02/2026: தலைவர்களின் நச் கருத்துக்கள் நறுக்கென்று உங்கள் பார்வைக்கு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல்(Tamil Nadu Assembly Election 2026) விரைவில் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் தமிழக அரசியல் களத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. தற்போது திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் கூட்டணியை பலமாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கூடுதல் சீட் கேட்பதோடு, ஆட்சியில் பங்கு கோருகிறது. இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக உள்பட பல கட்சிகள் உள்ளன. இன்னும் சீட் ஒதுக்கீடு செய்வது பற்றி கூட்டணி தலைவர்கள் பேசியிருந்தால் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் உள்ளது. இப்படியான சூழலில் தான் கடந்த 24 மணிநேரத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் டாப் 10 கருத்துகளை இங்கு பார்க்கலாம்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், ‛‛வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது. கடின உழைப்பே ஒரே வழி. 5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தை திமுக அரசு மாற்றி உள்ளது''
ராஜகண்ணப்பன்
திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் ‛‛காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் உயிரை வாங்கி வருகிறார்கள். எல்லாருக்கும் எல்லாம் கொடுப்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கை. திராவிட இயக்கத்தை வெல்ல வேண்டும் என்றால் இனிமேல், ஒருவன் பிறந்து தான் வர வேண்டும்.
கடந்த 1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்புறம் அவர்களால் ஏன் வர முடியவில்லை. இதனை சொன்னால் கோபித்து கொள்வார்கள். கருணாநிதி என்ன கூட்டணி ஆட்சி கொடுத்தாரா? காங்கிரஸ்காரர் நம்மோடு இருந்தால் இருந்துட்டு போகட்டும்.. வேண்டாம் என்று சொல்லவில்லை..
முதல்வர் ஸ்டாலின் சொல்வதை கேட்பது தான் நம் கொள்கை''.
செல்வபெருந்தகை
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, ‛‛கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. டெல்லி செல்கிறேன், சென்று திரும்பியவுடன் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். கூட்டணியில் இழுபறி எல்லாம் இல்லை. பேசிக்கொண்டு இருக்கிறோம். எனவே, இழுபறி என்ற வார்த்தையே வேண்டாம். எடப்பாடி பழனிசாமி திமுக குறித்து அல்லது காங்கிரஸ் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை''.
பிஎல் சந்தோஷ்
பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், ‛‛தேர்தல் தேதி அறிவிக்கும் வரை 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக 20 சதவீத தொகுதிகள் வரை கூட நாம் போட்டியிட வாய்ப்புள்ளது''.
திருமாவளவன்
விசிக தலைவர், ‛‛தமிழகத்தில் கல்வி உள்ளிட்ட பல துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை இன்னும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஓரவஞ்சனை என்ற கேள்வியை எழுப்பி வருகிறோம். தமிழகம் மட்டுமின்றி பாஜக ஆளாத மேற்குவங்கம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் பாஜக ஓரவஞ்சனை செய்கிறது''.
சு வெங்கடேஷன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு வெங்கேடஷன், ‛‛அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் 0 சதவீத வரி. இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் 18 சதவீத வரி. இது வர்த்தகம் அல்ல; சரணடைதல்.. தேசம் பார்த்து கொண்டிருக்கிறது''.
ராஜேந்திர பாலாஜி
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‛‛கடவுள் மீதும், தெய்வத்தின் மீதும் நம்பிக்கை வைத்து அரசியல் நடத்துபவன் நான். என்னை நம்பி வந்தவர்களை என்றைக்கும் நான் கைவிட்டது கிடையாது.என்னுடைய வெற்றிக்காக உழைக்கின்றன உங்களுயை வாழ்க்கையை உயர்த்துவதற்கு நான் என்றும் உறுதுணையாக இருப்பேன். விருதுநகர் மமாவட்ட மக்கள் குறைகளை போக்குவதற்காக எனது வீட்டு கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும்''.
பிரேமலதா
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, ‛‛தேமுதிக எங்கள் கூட்டணி... தமிழ்நாடு முழுவதும் சென்னை கோட்டை முதல் குமரி வரை அத்தனை பேரும் சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மார்ச் 10க்கும் தேர்தல் தேதி அறிவிப்பார்கள். ஏப்ரல் முதல் வாரம் தேர்தல் வர உள்ளது. அதற்குள் நீங்கள் விரும்பிய கூட்டணியை அறிவிக்க உள்ளோம்''.
சாட்டை துரைமுருகன்
நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன், ‛‛ஜெயலலிதா விஜயை கைகட்டி நிற்க வைத்தார். ஆனால் விஜய் ஜெயலலிதாவை ரோல் மாடல் என்கிறார். தமிழ்நாட்டில் எனக்கு பிடித்த தலைவர் கருணாநிதி தான் அவர் உயிரோடு இருக்கும் போதே சிலை வைக்க வேண்டும் என்று விஜய் கூறினார். இப்போது திமுக தீயசக்தி.. அதிமுக ஊழல் சக்தி என்று கூறுகிறார்''.
நாஞ்சில் சம்பத்
நாஞ்சித் சம்பத், ‛‛சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது விசிலே ஊதக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அப்படி என்றால் எவ்வளவு எரிச்சலில் இருக்கிறாங்க பாருங்க.. யாராவது திமுகவினர் வந்தால் விசில் எடுத்து ஊதிடுங்க.. விசில் சத்தத்தை சாதாரணமாக நினைக்காதீங்க.. யானை பிளிறலை விட அதிகமானது''.
-
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
அண்ணாமலை வாபஸ் வாங்க போகிறாரா? கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் ஷாக் கண்டிஷன்? விழிக்குது பாஜக -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications