Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 3/03/2026: ஸ்டாலின் முதல் விஜய் வரை.. தெறிக்கும் கருத்துகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் கட்சி தலைவர்களின் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனல் தெறிக்கும் கருத்துகளை பேசி வருகின்றனர். அதில் கடந்த 24 மணி நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தவெக தலைவர் விஜய் உள்பட கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை இங்கே சுருக்கமாக காணலாம்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடெபைற உள்ளது. இன்னும் சில தினங்களில் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கட்சிகளும், கூட்டணி பேச்சுவார்த்தை, அரசியல் மாநாடு, நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

tamil nadu assembly election 2026 2026

மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி தங்களது எதிர் கூட்டணி, எதிரான கட்சிகளை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் தலைவர்கள் கூறிய கருத்துகளை, இன்றைய டாப் 10 பேச்சில் (1/03/2026) நறுக்கென்று உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின், ''தமிழக வளர்ச்சி பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம். தற்போது விளிம்பு நிலையில் உள்ள 37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதியாக ரூ 2000 வரவு வைக்கப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.


உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ''பாஜகவால் மிரட்டி சேர்க்கப்பட்ட கட்சியை தவிர வேறு யாரும் அதிமுக கூட்டணியில் சேரவில்லை'' என விமர்சனம் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசினோம். இனி தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி விவாதித்தோம். சில கட்சிகளுடன் பேசி கொண்டு வருகிறோம். அவர்கள் கூட்டணிக்குள் வர வாய்ப்புள்ளது. புதிய கட்சி (சசிகலா கட்சி) தொடங்கியது பற்றி எதுவும் பேசவில்லை '' என்றார்.


ஆ.ராசா

திமுக எம்பி ஆ ராசா, ''மிசா சட்டத்திற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டவர் இந்திரா காந்தி. மிசா சட்டத்தின் போது நடந்த தவறுகளுக்கெல்லாம் இந்திரா காந்தி பொறுப்பேற்க முடியாது. அவர் மன்னிப்பு கேட்டதால் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளோம்'' என்றார்.

செல்லூர் ராஜு

திமுக முன்னாள் முதல்வர் செல்லூர் ராஜு, '' தீயசக்தி திமுகவை அழிக்கும் வரை அதிமுக ஓயாது.. ஒழியாது என்று எம்ஜிஆர் சபதம் ஏற்றார். அந்த தலைவர் உருவாக்கிய கட்சியை வளர்த்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவை லாரி ஏற்றி கொல்ல முயன்றது திமுக. அந்த கட்சியின் ஓபிஎஸ் இணைந்துள்ளார். இப்படிப்பட்ட மனிதரை போய் தமிழக முதலமைச்சராக ஆக்கினார்களே என்று மக்கள் வசைப்பாடி கொண்டுள்ளனர்'' என்றார்.

விஜய்

தவெக தலைவர் விஜய், ''நாங்குநேரியில் நடந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் கண்டனத்திற்குரியது.இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?. நம்பர் 1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?'' என கூறியுள்ளார்.

திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன், ''திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி பேசவில்லை. எங்களுக்கான அதிகார பகிர்வு என்பது எங்களின் வலிமைக்கேற்க அமைய வேண்டும். பங்களிப்புக்கு ஏற்ப அமைய வேண்டும். எத்தனை தொகுதிகள் என்பது பற்றியும் திமுகவிடம் தெரியப்படுத்தி இருக்கிறோம். அந்த எண்ணிக்கை உறுதியான பிறகு அதுபற்றி தெரிவிக்கிறோம். ராஜ்யசபா சீட் பற்றி நாங்கள் பேசவில்லை'' என்றார்.

புஸ்ஸி ஆனந்த்

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ''இரவு பகலாக தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. நாளை காலை விஜய் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். காவல்துறை என்னென்ன கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதனை பின்பற்றி நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்படும்''என்றார்.

செங்கோட்டையன்

தவெக மூத்த தலைவர் செங்கேட்டையன், ''தாய் மண்ணை காக்க கூடிய, தமிழ் மண்ணை காக்க கூடிய ஜாதி, மத பேதற்ற சமுதாயத்தை தமிழகத்தில் உருவாக்க கூடிய ஒரே தலைவர் விஜய் மட்டும் தான். எந்த சக்தியாலும் நம்மை அசைத்து கூட பார்க்க முடியாது. ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் கூட்டம் வருவது தவெகவிற்கு மட்டும் தான்'' என்றார்.

நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ''நெல்லையில், கஞ்சா போதையில் 6 இளைஞர்கள் இருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக கஞ்சா புழக்கம் அதிகரித்தது. தமிழக இளைஞர்களின் வாழ்வை சீரழிப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சிதை்து வருவது கொடூரமானது'' என்றார்.

சீமான்

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ''இஸ்லாமிய மக்களை மிக கேவலமாக இழிவுப்படுத்தி பயங்கரவாிகளாகவும், கொலைகாரர்களாகவும் சித்தரிக்கும் 'கேரளா ஸ்டோரி 2' திரைப்படம் வன்மையான கண்டனத்துக்குரியது. 'கேரளா ஸ்டோரி -1' திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட அனுமதித்தபோதே அதனை நாம் தமிழர் எதிர்த்து போராடிய நிலையில் 'கேரளா ஸ்டோரி -2' திரைப்டத்தை தமிழகம் முழுவதும் திரையிட திமுக அரசு அனுமதித்துள்ளது’’ என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+