இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 26/02/2026: எடப்பாடி டூ புஸ்ஸி ஆனந்த் வரை.. 2நச்’ கருத்துகள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் அனல் தெறிக்கும் கருத்துகளை பேசி வருகின்றனர். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், புஸ்ஸி ஆனந்த் வரை கடந்த 24 மணி நேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை இங்கே சுருக்கமாக காணலாம்.
தமிழக அரசியல் களம் தினம் தினம் சூடுபிடித்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, அரசியல் மாநாடு, நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் என்று தொடர்ந்து கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். அந்தவகையில் அவர்கள் கூறும் கருத்துகளை சுருக்கமாக இங்கு தருகிறோம்.

அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் தலைவர்கள் கூறிய கருத்துகளை, இன்றைய டாப் 10 பேச்சில் (26/02/2026) நறுக்கென்று உங்கள் பார்வைக்கு தருகிறோம்.
கேஎன் நேரு
தமிழக நகராட்சி துறை அமைச்சர் கேஎன் நேரு, ''திருச்சி மாநில மாநாடு தான் வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான மெயின் பிக்சர் ஆக அமைய உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி மார்ச் 9 ம் தேதி திருச்சியில் 10 லட்சம் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து மிக பிரமாண்டமாக நடத்த தயாராகி கொண்டிருக்கிறோம்'' என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ''இந்த சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். அதனை ஸ்டாலின் பார்க்கத்தான் போகிறார். யாருக்கும் அதிமுக அடிமை இல்லை.. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு திமுக அடிமையாக உள்ளது. திமுக கூட்டணியில் தான் கட்சிகள் 10 ஆண்டுகளாக அடிமையாக உள்ளன. எங்கள் கூட்டணி அப்படியில்லை. இது வெறும் தேர்தலுக்கான கூட்டணி மட்டும்தான். தேர்தலுக்கு பின் அந்தந்த கட்சிகள் கூட்டணியில் தொடர விருப்பம் இல்லையென்றால், தங்களின் கொள்கைக்கேற்ப செயல்படலாம்'' என்றார்.
நிவேதித் ஆல்வா
தமிழக காங்கிர மேலிட பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா கூறுகையில், ''தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது. தொகுதி பங்கீடு குறித்த அடுத்த கட்ட தகவல் விரைவில் வெளியாகும். தேர்தல் பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். மாநிலம் முழுவதும் பூத் கமிட்டியை பலப்படுத்தி வருகிறேன். '' என்றார்.
ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ், ''திராவிட கட்சிகளோடு தான் கூட்டணி இருக்கும். பிப்ரவரி 28 ம் தேதிக்குள் எந்த வாகனத்தில் (கூட்டணி) பயணிக்கிறோம் என்பது தெரிந்துவிடும்'' என்றார்.
நயினார் நாகேந்திரன்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ''இங்கிருந்தே (பாஜக) 20-30 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) செல்வார்கள் என்று நினைக்கிறேன். உண்மையிலேயே அது நடக்கவும் போகிறது. இறைவன் நினைத்தால் அமைச்சர்களாக கூட வருவார்கள்'' என்றார்.
கடம்பூர் ராஜு
அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, ''வரும் தேர்தலில் டப்பு டப்புனு இரட்டை இலையை பார்த்து பட்டன் அமுக்குங்க.. தேர்தல் முடிந்ததும் பட்டு பட்டுனு உங்க வீட்டிற்கு ரூ.10 ஆயிரம் வந்திரும்'' என்றார்.
சிவி சண்முகம்
அதிமுக எம்பி சிவி சண்முகம், ''எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானால் கல்விக் கடனை அரசே ஏற்கும். எங்கள் அரசால் அதனை கட்ட முடியும். ஏனென்றால் எங்கள் கூட்டணியில் பிரதமர் ஜி இருக்கிறா். ஜி இருக்கும் வரை ஜீ பூம்பா போல் தமிழ்நாட்டில் எல்லாம் நடக்கும். அவர் நினைத்தால் தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்தையும் தர முடியும்'' என்றார்.
புஸ்ஸி ஆனந்த்
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ''தலைமை கழகத்தின் அனுமதியின்றி மாநில மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்க கூடாது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடி பேட்டிகள் மற்றும் யூடியூட் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்க்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து தலைமை கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாக பெற வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications