இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 4/03/2026: இந்தி எதிர்ப்பு டூ சட்டம் ஒழுங்கு வரை.. தலைவர்களின் அனல் கருத்துகள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டத. கட்சி தலைவர்கள் பிரசாரக்கூட்டம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை இங்கே சுருக்கமாக காணலாம்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

அந்தவ கையில் திமுக - அதிமுக கட்சிகள் தங்களின் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்களும் ஓட்டு சேகரிப்பை தொடங்கி உள்ளனர். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தஞ்சாவூரில் இன்று நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் விஜய் பங்கேற்று பேசினார்.
இதுதவிர ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி தங்களது எதிர் கூட்டணி, எதிரான கட்சிகளை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் தலைவர்கள் கூறிய கருத்துகளை, இன்றைய டாப் 10 பேச்சில் (4/03/2026) நறுக்கென்று உங்கள் பார்வைக்கு தருகிறோம்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், ''திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர். இந்தி திணிப்பு வெறியில் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது பாஜக. கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதை சீண்டி பார்க்கும் இவர்களுக்கு சரியான படம் புகட்ட வேண்டும். தமிழ், ஆங்கில பெயர்களிலும் இந்நிலையை திணிக்கும் முயற்சியை கைவிட்டு, உடடியாக அங்கு சிரயான தமிழ் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை மத்திய பாஜக அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ''எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதா, அப்போது, அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகர பெட்டியை திறந்து இந்த இல்லாத இந்தி திணிப்பை எடுத்க்காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டு சென்றாரா?'' என்ற கேள்வி எழுப்பி உள்ளார்
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனவே 'அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்' பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று வரை இயங்கி வருகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு அண்ணாவின் பெயரை சூட்டாமல் 'கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம்'என்று பெயர் சூட்டியிருப்பது திமுக ஆட்சியின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது'' என கூறியுள்ளார்.
விஜய்
தவெக தலைவர் விஜய், ''அடுத்ததும் நாங்கதான் என்று முதல்வர் (ஸ்டாலின்) கூறுகிறார். ஆனால் அப்படியெல்லாம் நடக்கவே நடக்காது. 2வது முறை அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்கான சரித்திரமே கிடையாது. சீனாவில் சீன பெருஞ்சுவர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதனை விட பெரிய டாஸ்க் இது. அவரது அப்பாவால் (கருணாநிதி) கூட முடியவில்லை'' என்றார்.
நயினார் நாகேந்திரன்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ''தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் - ஒழுங்கு சரியில்லை. டிஜிபி நியமனம் கூட செய்ய முடியவில்லை. சட்டசபை தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி -எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆட்சி அமையும். அப்போது நிச்சயமாக தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்'' என்று கூறியுள்ளார்.
சசிகலா
சசிகலா, ''திமுக என்றைக்கு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதோ அன்று முதல் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்கை நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு சட்டம் ஒங்கு மிகவும் மோசமடைந்துவிட்டது'' என்றார்.
துரைமுருகன்
நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன், ''விஜய்யை பயன்படுத்தி இரண்டு சீட்டுகளை கூடுதலாக பெற்று திமுகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்தப்போகிறது காங்கிரஸ்.. இன்னும் யாராவத வருவாங்க என நம்பிக் கொண்டிருக்கிறார் விஜய்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications