"அஸ்திவாரம்".. ஒன்னுசேர போறாங்களாமே.. எடப்பாடிக்கு வேற வழியே இல்லையா.. அந்த "வோட் பேங்க்".. பாஜக செம
எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருக்கிறது பாஜக
சென்னை: எம்பி தேர்தலுக்கான தீவிரத்தில் பாஜக இறங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் மீதும் அதன் கவனம் அதிகமாகவே திரும்பி உள்ளது.. இதுகுறித்த தகவல்கள்தான் சுற்றி வருகின்றன.
கடந்த முறை அமித்ஷா சென்னை வந்தபோது, தமிழகத்தில் குறைந்தபட்சம் 5 இடங்களில் பாஜக வென்றாக வேண்டும் என்று கண்டிஷன் போட்டதாக தகவல்கள் வெளியாகின.
அந்த அடிப்படையில் களப்பணிகளை தமிழக பாஜக மும்முரமாக கையில் எடுத்துள்ளது.. குறிப்பாக, தென் சென்னை, வேலூர், நெல்லை, தென்காசி, கோவை, ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய 10 தொகுதிகளை குறி வைத்து வேலை பார்த்து வருவதாகவும் தெரிகிறது.

கரு நாகராஜ்
அதேசமயம், திமுகவின் அதிகார பலத்தை சமாளிக்க வேண்டுமானால் பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுக அணிகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என்பதில் பாஜக கடந்த சில நாட்களாகவே முனைப்பு காட்டவும் துவங்கிவிட்டது.. நேரடியாகவும், சில சமயம் மறைமுகமாகவும் அழுத்தங்களை தர துவங்கி உள்ளது.. பாஜக ஆதரவாளர் குருமூர்த்தியும் இதைதான் சொல்லி உள்ளார்.. பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜனும் இதைதான் வலியுறுத்தி உள்ளார்..

டபுள் டிஜிட்
கடந்த 4 மாத காலமாகவே, அதிமுக ஒற்றை தலைமை குறித்து வாய் திறக்காத பாஜக மேலிடம், சமீப காலமாகவே இந்த பிரச்சனையை அணுக துவங்கி உள்ளது. அதன் அறிகுறியாகவே, தங்கள் சொந்த கருத்துக்களாக, இந்த தலைவர்கள் வலியுறுத்துவதாகவும் தெரிகிறது.. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோது, ஓபிஎஸ்ஸுக்கு எந்த மாவட்டத்திலும் செல்வாக்கு இல்லை, மொத்த கட்சியும் தன்பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை அமித்ஷாவிடம் எடப்பாடி வலியுறுத்தியதாகவும், ஆனால், அதை அமித்ஷா தரப்பு காதிலேயே வாங்கி கொள்ளாமல், இருவரும் இணைந்து வாருங்கள் என்று சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது..

விஜயகாந்த்
ஓபிஎஸ் இல்லாத அதிமுகவில், பாஜகவுக்கு இந்த முறை டபுள் டிஜிட் சீட்டுக்களை ஒதுக்குவதாககூட எடப்பாடி தரப்பில் சொல்லப்பட்டும், ஒருங்கிணைந்த அதிமுக என்பதில் பாஜக தலைவர்கள் உறுதியாக இருப்பதாக செய்திகள் கசிந்தன. இப்போதுவரை, அந்த முடிவில்தான் அக்கட்சி தலைவர்கள் உள்ளனர்.. ஆனால், எடப்பாடியோ தொடர் பிடிவாதம் காட்டிவருவதால், பாஜக வேறுவிதமான முடிவுகளையும் எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி, சசிகலா, தினகரன், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி என அனைவரையும் ஒன்றாக இணைப்பது, பிறகு, கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை அமரவைப்பது தான் என்ற யோசனையை முன்வைக்க போகிறதாம் பாஜக..

PLAN A
இது தொடர்பாக சசிகலா மற்றும் தினகரனிடம் முதல் சுற்று பேச்சுவார்த்தையை முடித்து விட்டதாகவும் கூறுகிறார்கள். இதற்கு மறுப்பு சொல்லாமல், பாஜக முடிவுக்கு சசிகலா + தினகரன் தரப்பு ஓகே சொல்லியிருக்கிறார்களாம். அதனால்தான், பாஜகவுக்கு ஆதரவாகவே தினகரனின் பேச்சு உலா வந்து கொண்டிருக்கிறது என்பதை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. ஒருவேளை, ஒருங்கிணைந்த அதிமுக என்ற முடிவிற்கு எடப்பாடி பழனிசாமி, பிடிவாதம் பிடித்தால், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி ஒன்றை பாஜக தலைமையில் அமைப்பது என்ற முடிவையும் பாஜக எடுக்க தயங்காது என்று எச்சரிக்கிறார்கள்..

PLAN B
அதுமட்டுமல்ல, அப்படி 3வது அணி அமைய நேர்ந்தால், அந்த மாஸ் நடிகரை வைத்து, அரசியல் கட்சி தொடங்க வைத்து அவரை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்வது என்ற யோசனையும் உள்ளதாம்.. இருந்தாலும், தேர்தலுக்கு இன்னும் டைம் இருப்பதால், அவசரப்படாமல், மிகப்பொறுமையாக இந்த விஷயத்தை கையாள முடிவு செய்துள்ளதாம்.. எடப்பாடியை சமாதானப்படுத்தினால், அதிமுகவும் பலமாகும்.. திமுகவையும் வீழ்த்த முடியும்.. தாங்கள் நினைத்த 20 சீட்டுக்களையும் பெற முடியும் என்று ஒரே கல்லில் 3 மாங்காய்களை அடிக்கவே பாஜகவின் பிளான் நகர்வதாக கூறுகிறார்கள்.. எடப்பாடி பிடிவாதம் தளருமா? எல்லாரும் ஒன்று சேர்வார்களா? பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications