பொறியியல் கல்லூரிகளில் எது டாப்?.. தரவரிசை பட்டியல் வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்
தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதையடுத்து பொறியியல் படிப்பின் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.
பொறியியல் படிப்புகளில் சேர https://www.tneaonline.org/என்ற இணையதளம் மூலம் ஜூலை 19ஆம் தேதி வரை தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தானாகவும், சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு இடங்கள் என்ற அடிப்படையில் 110 மையங்கள் அமைக்கப்பட்டு பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் விண்ணப்பம்
தமிழகத்தில் தற்போது வரை பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறும்.

தரவரிசை பட்டியல்
மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிடப்படும். இவற்றில் ஏதாவது குறை இருப்பின் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மாணவர்கள் தெரிவிக்கலாம். ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகள்
இந்நிலையில் 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சென்னை கிண்டி ,குரோம்பேட்டை பொறியல் கல்லூரி, கோவை பொறியியல் கல்லூரிகள் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளன.

மாணவர்கள் விரும்பும் கல்லூரிகள்
கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை பார்த்து தங்கள் கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications