Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொழிலதிபரின் பண்ணையில் அசிங்கமாக சிக்கிய அரசியல்வாதி.. இரவு விருந்தில் இந்த பிரபலமா? மானமே போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலங்கானா மாநிலத்தில், முன்னாள் பிஆர்எஸ் எம்.எல்.ஏ பைலட் ரோஹித் ரெட்டியின் பண்ணை வீட்டில் நடைபெற்ற நள்ளிரவு பார்ட்டி, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்து வருகிறது.. இது தொடர்பான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வந்தாலும், பண்ணை வீட்டு அதிர்ச்சி சம்பவம் இன்னும் அம்மாநிலத்தை விட்டு நீங்கவில்லை. என்ன நடந்தது?

ரங்கா ரெட்டி மாவட்டம் மைனா பாத் அஜீஸ் நகர் பகுதியில், வார இறுதி விடுமுறை நாளையொட்டி சட்டவிரோதமாக மது மற்றும் போதை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஹைதராபாத் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Hyderabad Farmhouse Raid

தொழிலதிபர் பண்ணை வீடு

இந்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் போலீசார் மற்றும் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பண்ணை வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்..

போலீசாரின் இந்த திடீர் வருகையைக் கண்டு அதிர்ச்சியடைந்த டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் மிஸ்ரா என்பவர், அதிகாரிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதுமே, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கிச் சூட்டில் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், நிலைமை மிகவும் தீவிரமடைந்தது..

அரசியல்வாதி - இரவு விருந்து

இதையடுத்து பண்ணை வீட்டில் இருந்தவர்களை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.. இந்த சோதனையின்போது முக்கிய அரசியல்வாதிகள் அங்கிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..

முன்னாள் எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி, ஏலூரு தொகுதி எம்.பி. மகேஷ் குமார் யாதவ், தொழிலதிபர் மிஸ்ரா, ரமேஷ் குமார், விஜய் கிருஷ்ணா, ரித்தேஷ் ரெட்டி, காசிக் ரவி, அர்ஜுன் ரெட்டி மற்றும் ஒரு பெண் என மொத்தம் 11 பேர் போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.. பிடிபட்டவர்களிடம் விசாரணையும் நடந்தது.

அப்போது முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில் ரோஹித் ரெட்டி, மிஸ்ரா, ரித்தேஷ், காசிக் ரவி மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகிய 5 பேர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது..

இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவதற்காக அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.. பிடிபட்ட நபர்கள் சிம்லா மற்றும் கோவாவில் இருந்து வரும்போதே போதைப்பொருள் உட்கொண்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்..

சிக்கிய விவிஐபி

சோதனையின் போது அந்த பண்ணை வீட்டிலிருந்து சுமார் 2 கிராம் எடையுள்ள மர்மமான வெள்ளை பொடியை போலீசார் பறிமுதல் செய்தனர்.. அந்த பொடி என்ன வகையான போதைப்பொருள் என்பதை கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.. மேலும் தொழிலதிபர் மிஸ்ரா பயன்படுத்திய துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மிகப்பெரிய தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் ஆவர்.. கச்சிப் பௌலி மற்றும் அஜீஸ் நகர் பகுதிகளில் நடைபெற்ற இந்த தொடர் நடவடிக்கைகள் மாநிலத்தின் போதைப்பொருள் கும்பல்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது..

அதிர்ச்சியில் தெலுங்கானா

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தெலங்கானா அரசு மிகத் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், ஒரு முன்னாள் மக்கள் பிரதிநிதியின் பண்ணை வீட்டிலேயே இப்படியான சட்டவிரோத செயல்கள் நடைபெற்றது அரசுக்கும் போலீசுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

அதுமட்டுமல்ல, பண்ணை வீட்டின் உரிமையாளர் ரோஹித் ரெட்டி ஏற்கனவே பல அரசியல் சர்ச்சைகளில் சிக்கியவர் என்பதால் இந்த விவகாரம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது..

ஆனால் இந்த விருந்து யாரால் திட்டமிடப்பட்டது, போதைப்பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். இது தவிர சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்வதன் மூலம் இதில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கண்டறிய முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என்ற அடிப்படையில், உயர்மட்டத் தொடர்புகள் உள்ளவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.. இந்த சம்பவம் தெலங்கானா அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+