"டாப் ஸ்கோர்".. MBBS படிப்புக்கான தரவரிசை பட்டியல்.. மதுரை மாணவர் முதலிடம்.. நாளை மறுநாள் கலந்தாய்வு

எம்பிபிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா சுப்பிரமணியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது.

கடந்த 3-ந்தேதி ஆன்லைன் மூலம் இதனை விண்ணப்பிக்க, இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது.. பிறகு, மேலும் 3 நாட்கள் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அப்ளிகேஷன்

அப்ளிகேஷன்

அதன்படி 40,264 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 36,100 பேர் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,457 பேரும் விண்ணப்பித்து இருக்கறார்கள்.. இதற்கான முழுமையான பணி நிறைவடைந்ததும் சீட் மெட்ரிக்ஸ் பணி தொடங்கும்.. இன ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்கள் பிரிக்கப்பட்டு தர வரிசைபடி லிஸ்ட்டும் தயாரிக்கப்படும்... அநேகமாக ஒரு வாரத்திற்குள் தரவரிசை இந்த லிஸ்ட் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 கவுன்சிலிங்

கவுன்சிலிங்

ஆனால், எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.. அந்தவகையில், மொத்தம் 40,264 விண்ணப்பங்கள் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழுவுக்கு வந்துள்ளது.

BDS

BDS

அவற்றில் அரசு கல்லூரிகளில் சேர 25,059 விண்ணப்பங்களும், தனியார் ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 15,205 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களில் 5022 பேர் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். 85 பேர் மாற்றுத் திறனாளிகள், படைவீரர் பிரிவினர் 355 பேர், விளையாட்டு பிரிவினர் 306 பேர் இருக்கின்றனர்.. தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5050 இடங்களிலும் சென்னை, கே.கே.நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் 125 இடங்களிலும், 20 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 3050 இடங்களிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை நடக்க உள்ளது..

MBBS

MBBS

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 848 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர சுயநிதிமருத்துவக் கல்லூரிகளில் 1290 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும்... நடப்பு ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 455 பேர் சேர்க்கப்படுவார்கள். அதேபோல, பல் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 114 பேர் சேர்க்கப்படுவார்கள். பல் மருத்துவப் படிப்பை பொருத்தவரையில் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 இடங்களும், 20 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 1960 இடங்களும் மாநில அரசு இடங்களாக வைக்கப்பட்டு சேர்க்கை நடக்கிறது.

 லிஸ்ட்

லிஸ்ட்

605 இடங்கள் நிர்வாக ஒதுக்கீடாகவும், 30 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 7.5 இடஒதுக்கீட்டில் 558 இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது என்றும், நாளை மறுநாள் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.. மருத்துவ தரவரிசைப்பட்டியலில் மதுரை மாணவர் 705 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+