AI தொழில்நுட்பத்தில் கருணாநிதி! ஹைடெக் முறையில் திமுகவின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம்!
சென்னை: டி.ஆர்.பாலு புத்தக வெளியீட்டு விழாவில், AI தொழில்நுட்பத்தில் கருணாநிதியை பேச வைத்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கான முன்னோட்டத்தை பார்த்துள்ளது திமுக தலைமை.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எழுதிய ''பாதை மாறாப் பயணம்'' என்ற புத்தகத்தின் 3ஆம் பாகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன் தினம் வெளியிட்டர். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவதற்கு முன்னதாக, மறைந்த கருணாநிதியை AI தொழில்நுட்பத்தில் பேச வைத்து வியப்பை ஏற்படுத்தினார் டி.ஆர்.பாலு.

கருணாநிதியின் குரல் அச்சு அசலாக இருந்த போதிலும் உருவ அமைப்பில் மட்டும் மாற்றங்கள் இருப்பது கண்கூடாக தெரிந்தது. இருப்பினும் கருணாநிதியே வீடியோவில் பேசுவது போன்ற நிகழ்வு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் கருணாநிதியின் பிரச்சார உரையை AI தொழில்நுட்பத்தில் தயார் செய்தால் என்ன என்ற யோசனையில் உள்ளதாம் திமுக தலைமை.
இதனிடையே இந்த யோசனையை செயற்பாட்டுக்கு கொண்டு வருவது எந்தளவுக்கு சாத்தியம் எனத் தெரியவில்லை. டி.ஆர்.பாலு புத்தக வெளியீட்டு விழாவில் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்ட கருணாநிதி வீடியோவில், ஸ்டாலினை அவர் வெகுவாக பாராட்டுவது போன்ற வரிகள் அதிகம் இடம்பெற்றிருந்தன. வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகள் குறித்து கருணாநிதி பாராட்டுவது போன்ற வீடியோ வெளியானாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
திமுகவை பொறுத்தவரை காலத்திற்கேற்ப கட்சியில் புதுமைகளை புகுத்தி ஹைடெக் முறையில் பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கம். சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கியது முதல் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கியது முதல் கடந்த காலங்களில் எல்லாம் திமுக தன்னை அப்டேட் செய்து கொண்டது. அண்மையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் கூட, வெளிநாடுகளை போல் ட்ரோன் ஷோ மூலம் வானில் திராவிட இயக்கத் தலைவர்களின் உருவங்கள் ஜொலிக்க வைக்கப்பட்டது. இதனால் தேர்தல் பிரச்சாரத்திலும் பல்வேறு புதுமைகளை திமுக புகுத்தும் என எதிர்பார்க்ப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications