கசக்கும் காபி.. விலை உயரப்போகுதாமே.. காலநிலை மாற்றத்தால் விளைச்சல் பாதிப்பு.. உஷார்
சென்னை: காலநிலை மாற்றத்தின் காரணமாக காபி கொட்டைகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியா உள்ளிட்ட நாடுகளில் காஃபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் குறித்து அவ்வப்போது ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆனால், இது எங்கேயோ நடக்கிறது, அண்டார்ட்டிகா, ஆர்டிக் பகுதியில் பனி பாறைகள் உருகினால் நமக்கென்ன? என்று பலரும் கண்டும் காணாதது போல் இருக்கிறோம். ஆனால் சமீப நாட்களாக இந்த காலநிலை மாற்றம் நம்மையும் வெகுவாக பாதிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் பெய்த கனமழை இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை. அதேபோல சில நாட்களுக்கு முன்னர் சீனா எதிர்கொண்ட வெள்ளமும் நமக்கு செகென்ட் வார்னிங்.

இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக காபி பயிர்கள் விளைச்சல் சரிவை சந்தித்திருக்கின்றன. இது குறித்து காஃபி கொட்டை விற்பனையாளர்கள் கூறுகையில், "வழக்கமாக நாங்கள் நான் ரோபஸ்டா மற்றும் பீப்ரி போன்ற காஃபி கொட்டைகளை கிலோ ரூ.580க்கு வாங்கினோம். ஆனால் தற்போது இதன் விலை ரூ.650ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதுவே ரோபஸ்டா கொட்டைகள் கிலோவுக்கு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் காஃபி கொட்டைகளின் விலை உயரும். ஆனால் இந்த முறை ஜூலை மாதத்தில் விலை உயர்ந்திருக்கிறது. தென்னிந்தியாவை பொறுத்த அளவில் கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் காஃபி கொட்டைகள் அதிகம் விளையும். ஆனால் இந்த முறை பூக்கள் பூக்கும் காலத்தில் பருவமழை பெய்ததால் சுமார் 20% சதவிகிதம் வரை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது" என்று உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
வழக்கமான காலத்தில் இந்த செர்ரிகள் சீராக பழுத்திருந்தால் இரண்டு சுற்று அறுவடைகளில் வேலை முடிந்திருக்கும். ஆனால் மழை பெய்ததால் இரண்டு சுற்றுக்கு பதில் 4 சுற்று அறுவடை செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பெங்களூரில் காஃபி கொட்டை விற்பனை கடை வைத்திருப்பவர்கள் கூறுகையில், "விலையேற்றம் காரணமாக கடைசி 4 மாதத்தில் நாங்கள் 40 சதவிகிதம் அளவுக்கு வணிகத்தை இழந்திருக்கிறோம்.
காலங்காலமாக காஃபி கொட்டை விற்பனை செய்து வந்தவர்கள் தற்போது தங்களது கடையை மூடிவிட்டனர். சிலர் தரம் குறைவான கொட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்கின்றனர். இதைவிட பெரிய பாதிப்பு என்னவெனில் பல வாடிக்கையாளர்கள் இன்ஸ்டன்ட் காஃபிக்கு மாறிவிட்டனர் என்பதுதான். இந்த பிரச்னை தவிர உரம், பூச்சிக்கொல்லி உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளதால் எங்களால் பழைய விலைக்கு இதை விற்கவோ, கொள்முதல் செய்யவோ முடியவில்லை" என்று கூறியுள்ளனர். காஃபி கொட்டை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், காஃபி விலை உயர வாய்ப்பிருக்கிறது .
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications