ECR ரோட்டில் போக முடியாது.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. கேலோ சைக்கிளிங் போட்டியால் அறிவிப்பு!
சென்னை: கேலோ இந்தியா சைக்கிளிங் போட்டி நடைபெறுவதால் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதை ஒட்டி, சென்னை ஈ.சி.ஆரில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவளம் முதல் மாமல்லபுரம் வரை, நாளையும், நாளை மறுநாளும் போக்குவரத்து மாற்றப்படுகிறது. பொதுமக்கள் ஓஎம்ஆர் சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேலோ இந்தியா (Khelo India) விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் நாளை (27.01.2024) மற்றும் நாளை மறுநாள் (28.01.2024) நடைபெற இருக்கிறது. எனவே, கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பூஞ்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம் (OMR) வழியாக பயன்படுத்தி கொள்ளவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications