சென்னையில் கார் பந்தயம்.. முக்கிய சாலைகளில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.. வாகன ஓட்டிகள் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் நாட்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை சென்னையில் பிரதான சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர். இது குறித்து இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை நடத்துகிறது. வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் சென்னையில் நடக்கிறது.

chennai formula 4 car race traffic 4

போக்குவரத்து மாற்றம்: இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் ரேஸ் நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. இந்த போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள்:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான "சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்" 30.08.2024 முதல் 01.09.2024 வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி 30.08.2024 முதல் 01.09.2024 வரை மதியம் 12.00 மணி முதல் 2200 மணி வரை நடைபெற இருப்பதால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து வரும் வாகனங்கள்: a) காமராஜர்சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம்.

b) மவுண்ட் ரோட்டில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். c) சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்.

வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்: a) காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை. b) சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன்சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

b) முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை. ஈவிஆர் சாலை, சென்ட்ரல் இரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்

கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள்: தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12.00 மணி முதல் 22.00 மணி வரை செல்ல தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கார் பந்தயம் எங்கே நடைபெறுகிறது?: 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இந்த கார் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த சர்க்யூட், தீவுத் திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் அமைந்துள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் எனபது குறிப்பிடத்தக்கது.

கார் ரேஸ் போட்டிகளைக் காணச் செல்வோர் மெட்ரோ ரயில் மூலமாகச் செல்லலாம். மவுண்ட் ரோடு, அண்ணா சதுக்கம், பிராட்வே செல்லும் பேருந்துகளிலும் செல்லலாம். மேலும், சொந்த வாகனங்களில் செல்பவர்கள் பார்க்கிங் செய்வதற்கான இடங்களும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஃபார்முலா 4 ரேஸ் அட்டவணை: ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிகளின் கால அட்டவணை, கிராண்ட்ஸ்டாண்ட் இருக்கை விவரங்கள், தீவுத்திடலில் உள்ள பார்வையாளர் மாடங்களின் விவரங்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். அதன்படி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. மாலை 5.30 மணியளவில் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள்:
பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடிய எந்த பொருளும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படாது. இந்த பொருட்களை சேமிப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. மேலும் அவை அனைத்தும் பாதுகாப்பு சோதனை சாவடிகளில் பறிமுதல் செய்யப்ப்டும். திரும்பத் தரப்படமாட்டாது.

கூர்மையான பொருட்கள்: பிளேடுகள், கத்திகள், கத்திரிகோல், ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள், பெப்பர் ஸ்பிரே,பெரிய சங்க்கிலிகள் போன்றவை. ஆயுதங்கள்: துப்பாக்கிகள், கத்திகள், ராணுவ கத்திகள் பொன்றவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+