சென்னையை நோக்கி படையெடுத்த லட்சக்கணக்கான மக்கள்! பரனூர் டோல்கேட் டூ தாம்பரம் வரை டிராபிக்
சென்னை: தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள், இன்று மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். எனவே, சென்னையின் என்ட்ரி பாயிண்டான பரனூர் டோல்கேட், பெருங்களத்தூர், தாம்பரம், இசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு தீபாவளி அக்.31ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாளான அக்.30 அன்று பள்ளி, கல்லூரிகள் அரை நாட்கள் மட்டுமே செயல்படும் என சொல்லப்பட்டிருந்தது. அதே நேரம், தீபாவளிக்கு அடுத்த நாளான நவ.1ம் தேதியும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படியாக அக்.31 தொடங்கி நவ.3ம் தேதி வரை 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால், மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து சென்றனர்.

சென்னையிலிருந்து சுமார் 15 லட்சம் பேர் பொது போக்குவரத்து மூலம் சொந்த ஊருக்கு சென்றிருப்பதாக சொல்லப்பட்டது. இதனால் சென்னையின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெளியூர் செல்லும் மக்களுக்கு போதிய பேருந்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன. இப்படி இருக்கையில், வெளியூர் சென்ற மக்கள் தற்போது சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து மக்கள் நேற்றிரவே பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் சென்னை நோக்கி வர தொடங்கிவிட்டனர்.
இன்று காலை இவர்களில் பெரும்பாலானோர் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தாம்பரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதே நேரம், ரயில்களில் டிக்கெட் கிடைக்காதோர் பேருந்துகளில் சென்னை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். மறுபுறம் சொந்தமாக கார் வைத்திருப்பவர்களும் இன்று அதிகாலை சென்னைக்குள் நுழைந்துள்ளனர். இதனால் சென்னையின் என்ட்ரி பாயிண்ட்களான பரனூர் சுங்கச்சாவடி, பெருங்களத்தூர், தாம்பரம், இசிஆரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணிகளில், செங்கல்பட்டு மற்றும் சென்னை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பரனூர் சுங்கசாவடியில் நெரிசலை சமாளிக்க, கூடுதலாக இரண்டு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications