பொங்கல் லீவு முடிஞ்சு சென்னைக்கு வர்றவங்க நோட் பண்ணுங்க.. 3 நாட்களுக்கு இந்த ரூட் மாற்றம்
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னைக்கு வர தொடங்கியுள்ளனர். ஒரே நேரத்தில் பயணிகள் வருகை தந்ததால் சிங்கப்பெருமாள் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 3 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு சென்னையில் சில போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 6 நாட்கள் விடுமுறை கிடைத்ததால், சென்னை மற்றும் வெளியூர்களில் கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களால் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தோடு சென்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

விடுமுறைகள் முடிந்து திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்பதால், தற்போது சிலர் சென்னைக்கு புறப்பட தொடங்கினர். இன்று விடுமுறை தினம் என்றாலும் சென்னைக்கு குடும்பத்தோடு மக்கள் புறப்பட தொடங்கினர். இதனால் நேற்று இரவு நெல்லை, குமரி, தூத்துக்குடி பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதேபோல் சொந்த வாகனங்களிலும் பயணிகள் சென்னைக்கு புறப்பட்டனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் இன்று ஒரே நேரத்தில் குவிந்ததால், சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் தாம்பரம், வண்டலூர் பகுதிகளிலும் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.
குறிப்பாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்ததால், சிங்கப்பெருமாள் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை முதலே வாகனங்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது.
தொடர்ந்து வாகனங்கள் அதிக அளவில் வந்துகொண்டு இருப்பதால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னயில் 3 நாட்களுக்கு சில போக்குவரத்து கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.
* கனரக வாகனங்கள் திருப்போரூர் வழியாக வருவதற்கு பதிலாக, செங்கல்பட்டு வழியாக வர வேண்டும்.
* கனரக வாகனங்கள் இல்லா சாதாரண வாகனங்கள், ஒரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக வர வேண்டும்.
* இதேபோன்று சென்னை வரும் கனரக வாகனங்கள், பரனூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக வருமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் செல்ல இன்று பகல் 2 மணி முதல் ஜன.20 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
* சென்னையில் பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் வரும் திங்கட்கிழமை பிற்பகல் 12 மணி வரை சென்னை நோக்கி ஒருவழி போக்குவரத்தாக தேவைக்கு ஏற்ப மாற்றப்படும்.
* போக்குவரத்தை விரைவுபடுத்த ஜிஎஸ்டி சாலையில் ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும்.
* பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு தாம்பரம் போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications