Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் காலையிலேயே அதிரடி காட்டிய போலீஸ்.. ஆடிப்போன வாகன ஓட்டிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் விமான நிலையத்தை அடுத்து உள்ள பல்லாவரம் முதல் தாம்பரம் வரை உள்ள ஜிஎஸ்டி சாலையில் எப்போதுமே கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். அந்த பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த தடை உள்ளது. இந்நிலையில் தடையை மீறி நிறுத்திய வாகனங்களை போக்குவரத்து காவலர்கள் பறிமுதல் செய்தனர். அவற்றை வேனில் ஏற்றி கொண்டு காவல் நிலையம் சென்றனர்.

சென்னையில் மிகவும் நெருக்கடியான மற்றும் நெரிசல் மிகுந்த சாலைகள் லிஸ்ட் மிக அதிகம். அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சென்னை அண்ணா சாலை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, ஓஎம்ஆர் சாலை, கிண்டி முதல் கோயம்பேடு வரை உள்ள நேரு சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேளச்சேரி தாம்பரம் சாலை, பல்லாவரம் ரேடியல் சாலை, ஆவடி சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்றவை மிக நெருக்கடியான சாலைகள் ஆகும்.

chennai tambaram traffic

இந்த சாலைகளில் தினமும் காலையிலும் மாலையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். பீக் அவர்ஸில் இந்த சாலைகளில் சென்றால், நீண்ட நேரம் ஆகும். பொதுவாக சாலைகளில் வாகன நெரிசலுக்கு அதிகப்படியான வாகனங்கள் ஒரு காரணம் ஆகும். அதே நேரம் வாகன நெரிசலுக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது..

ஆக்கிரமிப்பும், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களும் முக்கிய காரணம் ஆகும். சென்னையை பொறுத்தவரை வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிக்கலான சாலை என்றால் அது ஜிஎஸ்டி சாலை தான். கிண்டி கத்திபாராவிற்கு கீழ் தொடங்கும் இந்த சாலை, மீனம்பாக்கம், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்ம், கூடுவாஞ்சேரி, காட்டங்குளத்தூர் சிங்கபெருமாள் கோவில், பரனூர் வரை மிகவும் நெரிசல் மிகுந்த சாலையாகும்.

இதிலும் தாம்பரம் முதல் பல்லாவரம் வரை உள்ள ஜிஎஸ்டி சாலையில் வாகன ஓட்டிகள் வாகனத்தை கடக்க தவமே இருக்க வேண்டும். அவ்வளவு நெரிசல் மிகுந்த சாலையாகும். இந்த சூழலில் இந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்த நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் வாகனங்களை நிறுத்தினால், போலீஸார் வண்டியை தூக்கி கொண்டு சென்று விடுவார்கள். அல்லது நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியதற்காக அபராதம் விதிப்பார்கள். அண்மையில் கூட குரோம்பேட்டையில் 'தி கோட்' திரைப்படத்திற்கு சென்றவர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றார்கள். திரும்ப வந்த அத்தனை பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் இன்று காலையிலேயே போக்குவரத்து போலீசார் அதிரடி காட்டினார்கள். போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தை தடுக்கும் நடவடிக்கையாக நடைபாதையை முழுவதும் ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை போக்குவரத்து காவலர்கள் பறிமுதல் செய்தனர். பல வாகனங்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். வாகனத்தை காணாமல் பதறிய வாகன ஓட்டிகள், போலீசிடம் சென்று அபராதம் கட்டிய பின்னரே வாகனத்தை எடுத்து சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+