சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை சேத்துப்பட்டு பக்கம் போறீங்களா?.. அப்ப "டைவர்ட்" ஆகாமல் இதை படிங்க பாஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சேத்துப்பட்டு, அசோக் பில்லர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்துள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பெரும்பாலான குடும்பத்திற்கு இரண்டு முதல் 3 பைக்குகள் வரையும் இரு கார்கள் வரையும் இருக்கின்றன. இது போல் வாகன போக்குவரத்து பெருக்கத்தால் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாலையை கடக்கக் கூட மணிக்கணக்கில் போக்குவரத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

இத்தகைய பெருத்த டிராபிக்கால் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் சற்று தாமதமாவதால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு மேம்பாலங்கள் கட்டினாலும் அதிலும் டிராபிக்!

 அலர்ட்! நாளை முதல் பைக்கில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. சென்னை போலீஸ் உத்தரவு அலர்ட்! நாளை முதல் பைக்கில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. சென்னை போலீஸ் உத்தரவு

போக்குவரத்து போலீஸார்

போக்குவரத்து போலீஸார்

இதனால் போக்குவரத்து போலீஸாரே ஆங்காங்கே போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் வாகன நெரிசலை குறைக்க சென்னை, அசோக் பில்லர் அருகே சோதனை ஓட்டமாக 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல் சேத்துப்பட்டு மெக் நிக்கல்ஸ் சாலை மற்றும் ஹாரிங்டன் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மாற்றப்பட்டுள்ளது.

பூந்தமல்லி

பூந்தமல்லி

மேற்கண்ட பகுதியில் தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசபிரகாஷ் சிக்னல் அருகே காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும். இதனால் தினமும் அந்த பகுதியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புரசைவாக்கம்

புரசைவாக்கம்

புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் வழியாக வரும் வாகனங்கள் டாக்டர் அழகப்பா சாலை வழியாக இடது புறம் திரும்பி டாக்டர் நாயர் பாயிண்ட் வழியாகச் சென்றன. கோயம்பேடு செல்ல வலது புறமும் சென்டரலுக்கு செல்ல இடதுபுறமும் திரும்பிச் செல்லுமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எழும்பூருக்கு

எழும்பூருக்கு

எழும்பூருக்கு நேராக செல்ல வேண்டும் எனவும் போலீஸார் அறிவித்துள்ளனர். இந்த போக்குவரத்து மாற்றங்கள், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் கருத்துகளை அறிந்து நிரந்தரம் செய்யப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

English summary
Greater Chennai Traffic Police says about route diversions in Chetpet, Ashok Pillar and Poonamalle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X