3 முறை ரயில் குலுங்கியது.. ஏசி நின்றது.. வெளியே கும்மிருட்டு.. ரயில் விபத்து குறித்து பயணி பேட்டி
சென்னை: ரயில் விபத்து ஏற்பட்ட போது எங்கள் பெட்டி 3 முறை குலுங்கியது என்றும் ஏசி இயந்திரம் நின்றுவிட்டது என்றும் அந்த ரயிலில் பயணித்து இரு குழந்தைகளுடன் உயிர் பிழைத்தபெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் இதுவரை 296 பேர் பலியாகிவிட்டனர். சுமார் 1000 பேர் காயமடைந்தனர். இந்த மீட்பு பணிகள் மேலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து விபத்தில் இருந்து இரு குழந்தைகளுடன் உயிர் தப்பிய பெண் ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் ரயில் விபத்து நேரிடும் போது தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது 3 முறை எங்கள் பெட்டி குலுங்கியது. அதிக சப்தம் கேட்டது.
உடனே ஏசி இயந்திரம் நின்றுவிட்டது. ரயிலும் முற்றிலுமாக நின்றுவிட்டது. என்ன நடந்தது என்றே எங்களுக்கு தெரியவில்லை. வெளியே எட்டி பார்த்தால் பயங்கர இருட்டாக இருந்தது. எங்களுக்கு எதுவுமே தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்துதான் ரயில் விபத்து ஏற்பட்டது என்பதையே உணர்ந்தோம்.
ஆனாலும் இத்தனை பயங்கரமான விபத்தாக இருக்கும் என்பதை நாங்கள் அறியவில்லை என அந்த பெண் உருக்கமாக தெரிவித்தார். இந்த விபத்து சம்பவத்தை அந்த பெண் விவரிக்கும் போது மிகவும் பதற்றத்துடனே காணப்பட்டார். இந்த விபத்தில் சிக்கி எந்தவித காயமும் ஏற்படாதவர்களை அவரவர் செல்லும் இடத்தில் சேர்க்கும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் செய்து வருகின்றன.
ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில் இந்த விபத்துக்கான காரணம் தெரிந்துவிட்டது. நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த இடங்களை பார்வையிட்டார். இன்று ரயில் தண்டவாளங்களை மீண்டும் பழையபடி கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுவிட்டன.
புதன்கிழமை காலைக்குள் அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் முடித்துவிட வேண்டும். அப்போதுதான் அந்த தண்டவாளத்தில் ரயில்கள் இயங்க முடியும் என தெரிவித்துள்ளார். நிறைய பேரின் இதயங்கள் வெளியே வந்துவிட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications