சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. 2 ரயில்கள் எழும்பூரில் இருந்து புறப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் சில தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஓரளவுக்கு பணிகள் நிறைவடைந்துள்ளதால், சென்னை - மதுரை தேஜஸ் ரயில் மற்றும் சென்னை எழும்பூர் - புதுச்சேரி மெமு விரைவு ரயில் ஆகிய 2 ரயில்கள் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5 ஆம் தேதி) முதல் எழும்பூரில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதனால், இந்த ரயில் நிலையத்தில் உள்ள 11 நடைமேடைகளில் 4 நடைமேடைகளில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக இவ்வழியாக சில ரயில்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது மேம்பாட்டுப் பணிகள் குறிப்பிட்ட அளவுக்கு நிறைவடைந்திருப்பதை அடுத்து சென்னை எழும்பூா் - மதுரை தேஜஸ் ரயில் (எண் 22671), சென்னை எழும்பூா் - புதுச்சேரி மெமு விரைவு ரயில் (எண் 66051) ஆகிய ரயில்கள் செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படவுள்ளது.
அதேபோல, மறுமாா்க்கத்தில் மதுரை - சென்னை எழும்பூா் தேஜஸ் ரயில் (எண் 22672), புதுச்சேரி - சென்னை எழும்பூா் மெமு விரைவு ரயில் (எண் 66052) ஆகிய ரயில்கள் எழும்பூா் வரை இயக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications