சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே.. திடீரென ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் பரிதவிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே திடீரென புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை இயங்காததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை போன்ற பெருநகரங்களில் பயணிகள் அதிகம் நம்பியிருப்பது புறநகர் ரயில்களைத்தான். அதிலும் சென்னையில் சாலை வழியில் பயணம் செய்தால் அலுவலகத்திற்கோ.. எங்காவது போக வேண்டிய இடத்திற்கும் சரியான நேரத்தில் சென்று விட்டால் பெரும் சாதனையாகத்தான் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு டிராபிக் இருக்கும்.

அதிலும் பீக் நேரங்களில் சொல்லவே வேண்டாம். எந்த சாலையில் பார்த்தாலும் பைக்குகளும் கார்களும் பேருந்துகளும் என சாலைகளில் சாரை சாரையாக அணி வகுத்து செல்வதை காண முடியும். கண்ணுக்கு எட்டிய தூரம் எங்கும் வாகனங்கள் தான் தெரியும். கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பெரும்பாலான பயணிகள் பஸ் பயணத்தை விட ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.
இதனால், சென்னையில் புறநகர் ரயிலிலும் பயணிகள் கூட்டம் அதிக அளவு இருக்கும். துல்லியமான நேரத்தில் இலக்கை சென்றடையும் என்பதால் பயணிகள் ரயில் பயணத்தை விரும்ப இதுவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்திலும் சென்னை சென்ட்ரல் - ஆவடி உள்ளிட்ட வழித்தடங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இப்படி பீக் நேரங்களில் பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையேயான மின்சார ரயில் போக்குவரத்து, சிக்னல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்னல் கோளாறு நீடிப்பதால் ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால், ரயில் நிலையங்களில் பயணிகள் தவித்து வருகின்றனர். முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. சிக்னல் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ரயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கோளாறு சீர் செய்யப்பட்டு ரயில் சேவை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications