சென்னை - செங்கல்பட்டு ரூட்டில் நாளை போறீங்களா? மின்சார ரயில் பயணிகளுக்கு வந்த முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை எழும்பூர் முதல் விழுப்புரம் வரையிலான வழித்தடத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பணிமனையில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருக்கின்றது. இதனால் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, மேலும் சில சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களுக்கு புறநகர ரயில் சேவை இன்றியமையா சேவையாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரயில்களில் பயணம் செய்கிறார்கள். காலை மற்றும் மாலை என பீக் நேரங்களில் மின்சார ரயில்களில் கால் வைக்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் இருக்கும்.

மின்சார ரயில் சேவைகள் ரத்து
இதனால் பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காதபடி ஞாயிற்றுக்கிழமைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். எனினும் கூடுதல் பணிகள் இருந்தால் பெரிய அளவில் ரயில் சேவைகளில் பாதிப்பு இல்லாமல் பகுதி நேர ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும். அந்த வகையில் நாளை பராமரிப்பு பணி காரணமாக சில வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
குறிப்பாக சென்னை எழும்பூர் முதல் விழுப்புரம் வரையிலான வழித்தடத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பணிமனையில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருக்கின்றது. இதனால் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:-
எந்தெந்த வழித்தடம்
* சென்னை கடற்கரை - செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களில், நாளை காலை 8.31, 9.02, 9.31, 9.51, 10.56, ஆகிய நேரங்களில், சிங்கபெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே மட்டும் மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* இதே போன்று செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு நாளை காலை 10.40, 11, 11.30, மதியம் 12, 1.10 ஆகிய நேரங்களில் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* காஞ்சிபுரம் டூ சென்னை கடற்கரைக்கு நாளை காலை 9.30 மணிக்கு செல்லும் மின்சார ரயில் செங்கல்பட்டு டூ கடற்கரை இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.
சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
இதேபோன்று நாளை சில சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. அதன்படி,
* நாளை காலை 10.30 மணிக்கு காட்டாங்குளத்தூர் டூ கும்மிடிப்பூண்டி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
* இதேபோல் நாளை காலை 10.46, 11, 11.20, மதியம் 12.20 மணிகளில் காட்டாங்குளத்தூர் டூ சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
* காலை 11.30 மற்றும் மதியம் 1.10 மணிகளில், செங்கல்பட்டு டூ சென்னை கடற்கரை வரை இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications