படிக்கும் காலத்திலேயே மாணவர்களை தொழில்முனைவோர்களாக மாற்ற பயிற்சி! அமைச்சர் தாமோ அன்பரசன் புது தகவல்!
சென்னை: படிக்கும் காலத்திலேயே மாணவர்களை தொழில்முனைவோர்களாக மாற்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.
மேலும், புதுமை நிறைந்த தொழிலில் ஈடுபடுபவர்களை ஊக்கப்படுத்த, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் மூலம், ஆதார நிதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் அவர் பேசியதாவது;

படிக்கும் காலத்தில்
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே, மாணவர்களை, புதிய கண்டுபிடிப்பாளர்களாக தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில், தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 30 ஆயிரத்து 794 இளைஞர்களுக்கும், ஊரக வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், தாட்கோ போன்ற அரசு துறைகளுடன் இணைந்து 7 ஆயிரத்து 259 இளைஞர்களுக்கும், புத்தாக்க தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்களுக்கும், 97 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள Incubation Centres மூலம் 68 ஆயிரம் மாணவர்களுக்கு என 3 லட்சத்து 27 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுமை நிறைந்த தொழில்
புதுமை நிறைந்த தொழிலில் ஈடுபடுபவர்கள், தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர்கள்ஆகியோரை ஊக்கப்படுத்துவதற்கு, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் மூலம், ஆதார நிதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான புத்தொழில் நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்
இதில், பசுமை தொழில்நுட்பம், பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், ஊரக வாழ்வாதார மேம்பாடு ஆகிய தொழில்களுக்கு மானியத் தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தி, 25 நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் நிதி உதவியை முதல்வர் வழங்கினார்.

புத்தொழில் முனைவோர்
புத்தொழில் முனைவோர்களையும் அவர்களுக்கு தொழில் சார்ந்த ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் வழங்கும் தொழில் இணைக்கும், Mentor-TN என்ற வழிகாட்டி மென்பொருள் இணையதளம் மாண்புமிகு முதல்வரால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. இவைகள் மட்டுமல்ல, உள்ளுர் திறமைகளை வளர்த்தெடுக்க, 20 குறும் குழுமங்கள், 5 பெரும் குழுமங்கள், புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள், பொது உற்பத்தி நிலையங்கள், பொது வசதி கட்டிடங்கள், தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள், என எண்ணற்ற
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications